1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? பிரவுன் ரைஸினை வெள்ளை அரிசியாக மாற்றுவதால் 70% சத்துகள் காணாமல் போய்விடுமாம்..!

1

பிரவுன் ரைஸில் சமைத்தால் நல்லதா என்று கேட்பவர்கள்.. இதனை முதலில் படியுங்கள்.

பிரவுன் அரிசி கைகுத்துதல் அரிசி என்றே சொல்லலாம். நெல்லின் மேல் உள்ள உமி தோலினை நீக்கினால் அது தான் பிரவுன் ரைஸ். அதில் அதிக அளவு விட்டமின்ஸ் மற்றும் சத்துகள் அடங்கி இருக்கின்றது.

ஆனால் நாமே அதனை மேலும் தோலுரித்து தவிடாக்கி, சத்துகளை விலங்குகளுக்கு கொடுத்துவிட்டு சத்தற்ற வெள்ளை அரிசியினை சாப்பிடுகின்றோம்… என்ன கொடுமை பாருங்கள்…

பிரவுன் ரைஸும் , நாம் அன்றாடும் சமைக்கும் அரிசியும் ஒரே நெல்லில் இருந்து தான் கிடைக்கின்றது. பிரவுன் ரைஸுன் தோல் பகுதியினை திரும்ப திரும்ப நீக்கி பாலீஸ் செய்தால் வெள்ளை அரிசி கிடைத்துவிடும்… ஆனால் சத்துகள்?

ஆம்.. இப்படி ஒவ்வொரு முறையும் தோலினை நீக்கிவிடுவதால் வெள்ளை அரிசியில் பல சத்துகள் குறைந்து காணப்படுகின்றது. பிரவுன் ரைஸினை சாப்பிடுவதால் கொளஸ்ட்ராலினை(Cholesterol) பெரிதும் குறைக்க உதவுகின்றது.. ஆனால் வெள்ளை அரிசியில் தோலினை நீக்கிவிட்டதால் அதில் இந்த தன்மை காணாமல் போய்விட்டது.

இப்படி பிரவுன் ரைஸினை வெள்ளை அரிசியாக மாற்றுவதால் அதிகபட்சம் 65- 70% சத்துகள் காணாமல் போய்விடுகின்றது.

அதே போல நீங்கள் சில சமயம் பார்த்து இருந்தால் சில அரிசி பைகளில் “Enriched Rice” என்று எழுதி இருக்கும். அதாவது, தோலினை நீக்கி கிடைத்த வெள்ளை அரசியில் சில சத்துகளை செயற்கையாக சேர்பது தான். ஆனால், இப்படி செயற்கையாக சத்துகள அரிசியில் எற்றினாலும் எற்ற முடியாத சில சத்துகள் இருக்கின்றது…. அவற்றில் ஒன்று தான் மேகனிஸியம் (Magnesium).

மேகனிஸியத்திற்கு அவ்வளவு என்ன மதிப்பு என்று நினைக்கின்றிங்களா?…

ஒரு கப் பிரவுன் ரைஸினை சாப்பிடுவதால் நம்முடைய உடலிற்கு ஒரு நாளைக்கு தேவையான 88% மேகனிஸியம் கிடைக்கின்றது. அதுமட்டும் இல்லாமல் மேகனிஸியம் நமக்கு அதிக அளவு சத்தினை கொடுக்கின்றது. இதனால் எளிதில் சாப்பாட்டில் இருந்து Energy வெளிபடுகின்றத்து. மேகனிஸியம் + கல்கியம் சேர்த்தால் தான் நம்முடைய எலும்புகள் உறுதியாக இருக்கின்றது என ஆய்வுகளில் கூறுகின்றனர். அதனால் தான் என்னவோ நம்முடைய நாட்டில் வயதனா பிறகு எல்லொருக்கும் கண்டிப்பாக மூட்டுவலி வருகின்றது…

பிரவுன் ரைஸில் அதிக அளவு நார்சத்து (Fiber) இருப்பதால் Colon Cancerயினை கட்டுபடுத்த அதிகம் உதவுகின்றது. அத்துடன் இதில் ஸெலினியம் என்பதும் காணப்படுகின்றது. இதனால் Thyroidயினை கட்டுபட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகின்றது மற்றும் புற்றுநோயினை போக்கவும் வழி வகுகின்றது.

பிரவுன் ரைஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இந்த அரிசி வேகவைக்க சிறிது நேரம் எடுக்கும் (சுமாராக 30 – 40 நிமிடங்கள்). அதே போல இந்த அரிசியில் இருக்கும் ஒரே ஒரு குறை என்றால் இதனை வாங்கியவுடன் சீக்கிரம் சமைத்து முடித்துவிட வேண்டும். (Expires Soon). அதனால் இதனை மூட்டையில் வாங்காமல் சிறிய பக்கட்டில் வாங்கனால் மிகவும் நல்லது. (நான் சொல்வது 2 நபர் உள்ள குடும்பத்திற்கு.. சிறிய பக்கட்)

பிரவுன் ரைஸினை சாப்பிடுவதால் எற்படும் பயன்கள்:
  • உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.
  • இதில் சக்கரை அளவு 0. அதனால் இதனை சக்கரை நோயளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டியது.
  • புற்று நோயினை வரமால் தடுக்கின்றது.
  • Thyroidயினை கட்டுபட்டுகுள் வைக்கின்றது.
  • கெட்ட கொழுப்பினை நீக்கிவிடுகின்றது.
  • சிறுநீரக கல் வராமல் தடுகின்றது. (அதிக அளவு நார்சத்து இருப்பதால்)
  • உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.

Trending News

Latest News

You May Like