1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? பீட்ரூட்டை அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் சிக்கல்கள்..!

1

பீட்ரூட்டை நறுக்கி சேலட் சேர்ந்து சாப்பிடலாம். பீட்ரூட் குழம்பு வைத்து சாப்பிடலாம். பீட்ரூட் பொறியல் செய்து சாப்பிடலாம் அல்லது பீட்ரூட் ஜூஸாக உட்கொள்வதன் மூலம் இன்னும் நிறைய மருத்துவ நன்மைகளை தொடர்ச்சியாக பெறலாம். தினமும் கூட நீங்க பீட்ரூட்டை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. வாரத்துல நீங்க இரண்டு அல்லது மூன்று நாட்கள் பீட்ரூட்டை எடுத்துக்கொள்ளலாம்.

அல்சர் குணமாகுறதுக்கு பீட்ரூட் அவசியமானது. அல்சரால் அவதிப்படுபவர்கள் பீட்ரூட்டை தங்களுடைய உணவுகளில் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். வெறும் வயித்துல சிறிதளவு தேன் கலந்து பீட்ரூட் ஜூஸ் குடிச்சிட்டு வரும்போது அல்சர் உங்களுக்கு விரைவில் குணமாகும்.

உடலில் இருக்கும் இருந்து நச்சுகளை நீக்குவதற்கு பீட்ரூட் சாப்பிடலாம். சிறுநீரகம், பித்தப்பை, கல்லீரல் போன்ற உடலினுடைய உள்ளுறுப்புகளில் இருக்கக்கூடிய நச்சுக்களை நீக்குவதற்கும், உடலில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்றி உங்களுடைய உடலை சுத்தமாக ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பீட்ரூட் ஜூஸ் மிகச் சிறந்த ஒரு தீர்வாக இருக்கும் 

உடலில் ரத்த சிகப்புணுக்கள் அதிகரிக்க பீட்ரூட்டை எடுத்துக்கொள்ளலாம். பீட்ரூட்லில் மிக அதிக அளவு இரும்பு சத்து மற்றும் வைட்டமின் பி1 இருப்பதால், ரத்த சிகப்பு அணுக்களுடைய எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும். உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து தடையில்லாத ரத்த ஓட்டத்தை கொடுக்கும். இதன் மூலமாக ரத்த புரதம்னு சொல்லக்கூடிய ஹீமோகுளோபின் அதிகமாகும். அனிமியா என்ற ரத்த சோகை போன்ற பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

அலர்ச்சி எதிர்ப்பு நிறைந்திருக்கக்கூடிய உணவுகளில் பீட்ரூட்டும் ஒன்று. பீட்ரூட்ல பீட்டா லைன் என சொல்லக்கூடிய அலர்ச்சி எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் நிறைந்திருப்பதால் அலர்ச்சி போன்ற பிரச்சைனையை தீர்ப்பதற்கு பீட்ரூட் உதவிகரமாக இருக்கும். குறிப்பாக சிறுநீரகத்தில் உண்டாகக்கூடிய அலர்ச்சியை போக்குவதற்கு பீட்ரூட் நல்ல உதவிகரமாக இருக்கும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கிறதுக்கு பீட்ரூட்டை உங்களுடைய உணவுகளில் சேர்த்துக்கலாம். நார் சத்துக்கள் (பைபர்) பீட்ரூட்டில் மிக அதிக அளவில் இருப்பதால் ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும். ஜீரணம் சார்ந்த பலவிதமான மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க பீட்ரூட்டை கண்டிப்பாக உங்கவுகளில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பீட்ரூட்டின் பக்கவிளைவுகள் இவைதான் -எச்சரிக்கை

நிறைய மருத்துவ நன்மைகளை கொண்ட உணவுப் பொருளாக பீட்ரூட் இருந்தாலும், ஒரு சில தீமைகளையும் கொண்டுள்ளது. எனவே பீட்ரூட்டுக்கும் சைடு எஃபெக்ட்ஸ் பக்கவிளைவுகள் இருக்கிறது. பீட்ரூட்டை அதிகமாக சாப்பிடும் போதுதான் இந்த பக்கவிளைவுகள் ஏற்படும். 

பீட்ரூட்டை அதிகமாக சாப்பிடும் போது மூச்சு குழாய் அலர்ச்சி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கு. எனவே போதுமான அளவு பீட்ரூட் எடுத்துக்கொள்வது நல்லது. 

பீட்ரூட்ல ஆக்சிலேட்டுகள் அதிகமாக இருக்கிறதால் மற்ற உணவுகளில் இருக்கக்கூடிய கால்சியத்தை உடல் உறிஞ்சுவதற்கு சற்று சிரமம் உண்டாகும். இதன் காரணமாக உடலில் கற்கள் அதிகரிக்கிறதுக்கு வாய்ப்பு ஏற்படலாம். 

சிறுநீர் கற்களை கரைக்கவும்,  சிறுநீரக நோய் சம்பந்தமான தொற்று நோய்களை ஏற்படாமல் இருக்க பீட்ரூட்டை அதிகமாக உட்கொள்ளாமல் தேவையான அளவுக்கு சாப்பிட்டாலே போதுமானது. 

பீட்ரூட்ல நைட்ரேட்கள் வந்து அதிகம் இருக்கிறதால், அதை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது வயிற்று வலி உண்டாகுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால் பீட்ரூட்டை போதுமான அளவுக்கு எடுத்துக்கொள்வது நல்லது. 

Trending News

Latest News

You May Like