1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர்

1

இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.

* இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

* ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

* இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

* இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

* இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.

* இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.

* ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு, இளநீர் ஒரு நல்ல மருந்து.

* வளர்ச்சியை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள், இளநீரில் உள்ளன.

* இளநீர் உடல் சூட்டைத் தணிக்கிறது.

* வேர்க்குரு, வேனற்கட்டி, பெரியம்மை, சின்னம்மை மற்றும் தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த, இளநீரை உடம்பின் மீது பூசிக் கொள்ளலாம்.

* இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.

* இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக, காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானம்.

* ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்கிறது.

* முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும், இளநீர் சிறந்த டானிக் ஆகும்.

* சிறுநீர் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது.

* சிறுநீரக கற்களைக் கரைக்க உதவுகிறது.

* சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது.

* நெருக்கடி காலக்கட்டங்களில், நோயாளிகளுக்கு இளநீரை நரம்பு ஊசி மூலம் செலுத்தலாம்.

* இளநீர் மிகமிகச் சுத்தமானது. உடலில் சூட்டை உண்டாக்காது. சிவப்பு ரத்த அணுக்களை அழிக்காது. இதனால் தான், ரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக, இளநீர் பயன்படுத்தப்படுகிறது.

* இளநீரின், சிறந்த மின் பகுனித்தன்மை, மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது.

* ரத்தத்தில் கலந்துள்ள, நச்சுப்பொருளை அகற்ற இளநீர் உதவுகிறது.

நம் ரத்தத்தில் இருப்பது போல, சரியான அளவில் மின்பகுனி உப்புக்கள் இளநீரில் இருப்பதால், இளநீர், இயற்கை தந்த நல்லதொரு டானிக். சரியாகச் சொல்வதானால், இளநீர் ஒரு உயிர்த்திரவம். புது இளநீர், உடலுக்கு நல்லது. எப்போதும், வெட்டிய உடனேயே, இளநீரைப் பருகி விட வேண்டும். இதை உண்டால், சளி பிடிக்காது; மாறாக, சளி அகலும்.

Trending News

Latest News

You May Like