இது தெரியுமா ? முடி உதிர்வை கட்டுப்படுத்தும் தேங்காய் பூ பேஸ்ட்..!
சிலர் முடி வளரவில்லை என்றாலும் கூட பரவாயில்லை ஆனால் முடி உதிர்வு மட்டும் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என சோர்ந்து விடுவார்கள். இப்படி முடி உதிர்வு பிரச்சினை அதிகமாக இருக்கும் போது கடைகளில் இருக்கும் செயற்கை பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் முடி உதிர்வு அதிகரிக்குமே தவிர ஒரு போதும் குறையாது. அந்த வகையில் தலைமுடி உதிர்வை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும் என்றால் வீட்டிலுள்ள சில பொருட்களை வைத்து மட்டுமே வீட்டு வைத்தியம் செய்யலாம். அப்படி என்ன செய்தால் தலைமுடி உதிர்வதை முற்றிலுமாக தடுக்கலாம் என்பதை விளக்கமாக பார்க்கலாம்.
தேங்காய் பூ பேஸ்ட்
தேவையான பொருட்கள்
தேங்காய் -1மூடி
வெந்தயம் -3 டீஸ்பூன்
முட்டை – 1
காட்டன் துணி – சிறிதளவு
செய்முறை
வெந்தயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளவும். துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். பின்னர், அரைத்த பூவிலிருந்து பாலை மட்டும் தனியாக பிரித்தெடுக்க வேண்டும். இந்த பாலையும் வெந்தயத்தையும் மீண்டும் மிக்ஸியில் பேஸ்ட் போன்று அரைத்து கொள்ளவும். அரைத்த பின்னர் காட்டன் துணியை பயன்படுத்தி பேஸ்ட்டை வடிக்கட்டவும். இந்த பேஸ்ட்டுடன் 1முட்டையின் வெள்ளை கருவினை மட்டும் சேர்த்து 2 நிமிடம் வரை கலந்து விடவும். இதனை நன்றாக கலந்து விட்டால் பேஸ்ட் தயார். இதனை குளிப்பதற்கு முன்னர் தலைக்கு தடவி மசாஜ் செய்யவும்.
இதனையடுத்து, 20 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடி உதிர்வு கட்டுபடுத்தப்படும்.