1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? ரோஜா இதழ்களை சுத்தம் செய்து அப்படியே சாப்பிட்டு வர...

1

ரோஜா இதழ்களை சுத்தம் செய்து அப்படியே சாப்பிட்டு வர சுவையையும், மணத்தையும் தரும். வயிற்றுக் கடுப்பு, சீத பேதி இவைகளையும் போக்கும். உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி தேக ஆரோக்கியத்தை வளர்க்கும். வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும். 

பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் ரத்த ஒழுக்கை நிறுத்தும். மலமிளக்கும் குணமுடையது. பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்புண், ரசவீறு குறையும். குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச்சதை வளர்ந்து ஆறும். ரோஜா பூவிலிருந்து பன்னீர் தயாரிக்கப்படுகிறது. ரோஜாபூவிதழ் 1500 கிராம், அதனுடன் நாலரை லிட்டர் தண்ணீர் சேர்த்து வாளியிலிட்டு நன்கு  காய்ச்சி வடிக்கும் நீரே பன்னீராகும். 

ரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சில் இருக்கும் நேரம் சில துளிகள் விட்டு வந்தால் எரிச்சல் மாறும். கண் நோய் சம்பந்தமான  மருந்துகள் தயாரிக்க பன்னீர் பயன்படுகிறது. அதிக வியர்வை போக்க குளிக்கும் நீரிடன் பன்னீரைக் கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி  புத்துணர்ச்சி ஏற்படும். 

ரோஜா துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடையது, இந்த துவர்ப்பு சுவை இரத்தத்தை கட்டக்கூடியது. இரத்தத்துடன் வரும் மலகழிவு அதாவது சீதபேதி என்கிற நோயை இது குணப்படுத்துகிறது. நீண்ட காலம் மாதவிடாய் ஆகிறது என்பவர்களுக்கு இந்த ரோஜாப்பூ ஒரு அருமையான மருந்து. இது ஒரு சிறந்த மலமிலக்கியாகவும் பயன்படுகிறது. உடம்பு உற்சாகமாக இருப்பதற்கு நம் பல விலை உயர்ந்த வைட்டமின் மாத்திரைகள் அல்லது டானிக்குகளை மருத்துவரை ஆலோசித்து வாங்கிக்கொள்கிறோம். ரோஜா பூ ஒரு இயற்கை அளித்த உற்சாக டானிக் என்பது பலருக்கு தெரியாது. உடலுக்கு சுருசுருப்பை தரக்கூடிய ஒரு அற்புதமான மூலிகை பூ இந்த ரோஜாப்பூ.

ரோஜாப்பூ மிக எளிமையாக கிடைக்கக்கூடிய ஒரு வகை பூ. ஹைப்ரைட் ரோஜாவை பயன்படுத்தாமல் நாட்டு ரோஜா அல்லது பன்னீர் ரோஜாவை பயன்படுத்துவது மிகவும் நல்லது. எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடியது இந்த நாட்டு ரோஜா அல்லது பன்னீர் ரோஜா. நம் வீட்டின் நிலத்திலோ அல்லது தொட்டிகளிலோ வைத்து தினம் ஒரு ரோஜாப்பூவை சாப்பிட்டு வந்தால் நம் வயிற்றில் உள்ள புண்கள் ஆறிவிடும். நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் அடிக்கடி நோய்வாய்ப்படாமல் இருக்க முடியும். உடல் சூடு தனிய ரோஜ நீர் ஊரல் பயன்படுகிறது. ரோஜா நீர் ஊரல் என்பது ரோஜா இதழை 6 லிருந்து 8 மணிவரை நீரில் ஊரவைக்கவேண்டும் அப்படி வைக்க ரோஜாவிலிருக்கும் சாறு நீரில் இறங்கிவிடும் இதுவே ரோஜா நீர் ஊரல் என்று அழைக்கப்படுகிறது.

ஆண்மை குறைபாடு உடல் உஷ்ணம் அதிகம் இருப்பவர்களுக்கும், வெப்பம் நிறைந்த இடங்களில் பணி புரிகின்ற ஆண்களுக்கும் அவர்களின் விந்தணுக்கள் குறைத்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்றன வாய்ப்புகள் அதிகமாகின்றன. ரோஜா பூவின் இதழ்களை சாப்பிடுவதால் உடலை குளிர்ச்சியடைந்து, ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்குகிறது. ரோஜா பூவை அடிக்கடி முகர்ந்துகொள்வதால் உடலுறவில் ஆர்வமில்லாத நிலை நீங்கும். மலச்சிக்கல் ரோஜா இதழ்கள் வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலையை சீர் செய்கிற சக்தி அதிகம் கொண்டுள்ளது. இது செரிமானம் நடக்க மிகவும் உதவியாக இருக்கிறது. 

மேலும் உங்கள் பசியை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல் குறைய இது ஒரு சிறந்த மருந்து ஆகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க ரோஜா இதழ்களை மென்று சாப்பிடுவது நல்லது. இளமை தோற்றம் அனைவருக்குமே எப்போதும் இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்கிற ஆவல் இருக்கத்தான் செய்கிறது. இதற்காக விலையுர்ந்த பல அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதை விட ரோஜா பூ இதழ்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உங்களின் தோலின் செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தி பளபளப்பை அதிகரித்து, சுருக்கங்களை போக்கி, இளமை தோற்றத்தை நீடிக்க செய்கிறது. மயக்கம் ஒரு சிலருக்கு வெளியில் செல்லும் போது மயக்கம் ஏற்படும், அதிலும் குறிப்பாக கோடைகாலங்களில் உடலின் உஷ்ணம் அதிகரித்து ரத்த ஓட்டம் மூளைக்கு செல்லாமல் சுணங்குவதால் இத்தகைய மயக்க நிலை ஏற்படுகிறது. இப்படிபட்டவர்கள் வெளியே செல்லும் போதும், வீட்டிற்கு திரும்பிய பின்பும் ரோஜா பூவை முகர்ந்து கொள்வதாலும், அந்த பூவின் இதழ்களை சாப்பிடுவதாலும் மயக்க நிலை ஏற்படாமல் தடுக்க முடியும். உடல் மற்றும் மனம் சுறுசுறுப்புடன் இயங்கும். 

மாதவிடாய் பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் உதிரப்போக்கு ஒரு இயற்கையான நிகழ்வாகும். ஆனால் சில பெண்களுக்கு இந்த மாதவிடாய் காலத்தில் ரத்த போக்கு அதிகரிப்பதும், அடிவயிற்று வலி ஏற்படவும் செய்கிறது. இத்தகைய காலங்களில் பெண்கள் காலையில் ரோஜா இதழ்களை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். சீதபேதி, வயிற்று போக்கு உடல் மிகவும் உஷ்ணம் அடைவதாலும், வேறு சில காரணங்களாலும் சிலருக்கு சீதபேதி எனப்படும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இந்த சீதபேதி ஏற்பட்டவர்கள் தொடர்ந்து ஏற்படும் வயிற்று போக்கு நிற்க சிறிது ரோஜா பூக்களை சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் இப்படிப்பட்ட கடுமையான சீத பேதி நீங்குவதோடு தொடர்ந்து ஏற்படும் வயிற்று போக்கும் நிற்கும்.

 இதயம் நமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருந்தாலும், இதயத்திற்கு நலத்தை தருகின்ற உணவுகள் மற்றும் மூலிகைகளை சாப்பிட்டு வருவது நல்லது. காலையில் ரோஜா இதழ்களை மென்று சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. ரத்தம் கட்டிக்கொள்வது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும்.

பன்னீர் ரோஜாவின் இதழ்களுடன், வேப்பிலை சேர்த்து அரைக்கவும். அத்துடன் சில துளிகள் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி, கண்களுக்கு மேல் பன்னீரில் நனைத்த பஞ்சை வைத்துக் கொண்டு 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். இது முகத்திலுள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்கி, சருமத்தைப் பளபளப்பாக்கும். ரோஜா இதழ்களைப் பால் விட்டு அரைத்து, உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் இயற்கையான நிறம் பெறுவதுடன், பளபளப்பாகவும் மாறும்.

ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு காய வைத்த சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும். ஒரு கப் மல்லிகைப்பூவுடன் 4 லவங்கம் சேர்த்து அரைக்கவும். அதில் சுத்தமான சந்தனம் சேர்த்து, வெதுவெதுப்பான தண்ணீர் விட்டுக் குழைக்கவும். இதை முகம், நெற்றி, கழுத்து, முதுகுப் பகுதிகளில் தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த தண்ணீரால் கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட கருமை, சின்னச் சின்ன கட்டிகள் சரியாகி, சருமம் ஒரே சீரான நிறத்துக்குத் திரும்பும்.

Trending News

Latest News

You May Like