1. Home
 2. ஆரோக்கியம்

இதை தெரிஞ்சிக்கோங்க ? கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க எலுமிச்சை ஜூஸ் நமக்கு உதவுமா?

1

ஒரு முழு எலுமிச்சை பழத்தை சுடுநீர் அல்லது குளிர்ந்த நீரில் கலந்து, நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டு வந்தால் அது தரும் எனர்ஜியே தனி!

தினமும் எலுமிச்சை சாறு பருகிவர எலுமிச்சையில் உள்ள வைட்டமின் C அதிகம் இருப்பதினால் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.மேலும், இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் பருகி வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடையை குறைக்க உதவுகிறது எலுமிச்சை.எனவே ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைய , தினமும் காலையில் எலுமிச்சை சாற்றுடன் மஞ்சள் தூள் கலந்து பருகி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு சிட்டிகை தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது தொண்டை புண் உள்ளவர்களுக்கு நன்கு தெரிந்த வீட்டு வைத்தியம். இந்த கலவை தொண்டை புண் பிரச்சனையை உடனடியாக சரிசெய்யும். மேலும்  எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நமது தொண்டையை சுத்தப்படுத்துகிறது மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

எலுமிச்சையின் மற்றொரு சிறந்த பயன், இது இரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் உங்களது உடலை சோர்வடைவதில் இருந்து மீட்டு ஓய்வளிக்கும். எலுமிச்சை சாறு நமது மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

தினமும் எலுமிச்சை ஜூஸை சாப்பிடும் போது, அது உடலில் உள்ள அனைத்துக் கசடுகளையும் அடித்து இழுத்துக் கொண்டு வருவதால், செரிமானப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும்.மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப் படுபவர்கள், இந்த எலுமிச்சை சாறு பானத்தை தினமும் பருகி வந்தால், செரிமானம் மேம்பட்டு, மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

அதிக நார்ச்சத்து உள்ள பழங்களை எடுத்துக்கொள்வது உங்கள் இரத்த குளுக்கோஸைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதனால் நாம்  சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்க முடியும். இது நீரிழிவு நோயைப் பெறுவதற்கான ஆபத்தை குறைக்கிறது. மேலும் நீரிழிவு நோயாளிகள் தங்கள் நிலையை நிர்வகிக்க எலுமிச்சை உதவியாக இருக்கும்.

குறிப்பாக எலுமிச்சை சாறு கல்லீரலில் உள்ள நச்சு கிருமிகளை அழிக்கிறது. இதனால் கல்லீரல் சுத்தம் அடைவது மட்டும் இல்லாமல் கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும் விரைவில் தீர்வு காண இயலும்.

உடலில் யூரிக் ஆசிட் அதிகமானால் கால் வீக்கம் ஏற்படும், எலுமிச்சைக்கு இந்த யூரிக் ஆசிட் அளவை  குறைக்கும் தன்மை உள்ளது.

உடல் மற்றும் மனம் ஆகியவை ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் எடையைக் குறைக்க முடியும். அல்கலைன் அதிகமுள்ள எலுமிச்சை ஜூஸ் நம்மை எப்போதுமே சந்தோஷப்படுத்தி, மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இப்பழத்தில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து, பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நாம் குறைவாகவே சாப்பிடுவோம். உடல் எடையும் குறைந்துவிடும்.

காபி குடிப்பதால் அவ்வப்போது ருசியும் மணமும் கிடைத்து வந்தாலும், அது நரம்பு மண்டலத்தையும் செரிமானத்தையும் பாதிக்கக் கூடியது. ஆனால், எலுமிச்சையின் பலனை அறிந்து, எலுமிச்சை ஜூஸைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காபிக்கு விரைவில் தலைமுழுகி விடலாம்.

எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

 1. எலுமிச்சை ஜூஸ் ஆன்ட்டிசெப்டிக் பண்புகளைக் கொண்டுள்ளது.

 2. இது ரத்தத்தை சுத்திகரிக்கிறது.

 3. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய்த்தொற்று அபாயங்களைக் குறைக்கிறது.

 4. உடலின் pH அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது.

 5. தினசரி ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

 6. எலுமிச்சை ஜூஸில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் இதய நோயாளிகளுக்கு நல்லது.

 7. இது பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.

 8. சளித் தொந்தரவு உள்ளவர்களும் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.

 9. வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலிக்கு நல்ல நிவாரணம் தருகிறது எலுமிச்சை பழச்சாறு.

 10. இது கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

 11. உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுப்பதில் எலுமிச்சை பழச்சாறு நல்ல பங்காற்றுகிறது.

 12. கண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க இது உதவுகிறது.

 13. செரிமான நொதிகளின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது.

 14. முகப்பருக்கள், முகச் சுருக்கங்கள் போன்ற சருமப் பிரச்னைகளைத் தீர்க்கிறது.

 15. இதில் உள்ள பொட்டாசியம் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கிறது.

எலுமிச்சை சாறை வெறும் சாராக எடுத்துக்கொள்ளக் கூடாது, ஏனென்றால் இதில் உள்ள அமிலத்தன்மை பற்களை அரிக்கும் தன்மை கொண்டது.

ஒரு மடங்கு எலுமிச்சை சாறுக்கு ஐந்து மடங்கு தண்ணீர் சேர்த்து அருந்த வேண்டும். ஸ்ட்ரா  வைத்து குடிப்பது பற்களில்  பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கலாம்.

சுவாசக் கோளாறு மூச்சை இழுத்து இழுத்து விடுதல் போன்ற தொந்தரவு இருப்பவர்கள், அதிக வாந்தி இருப்பவர்கள்  எலுமிச்சை சாறு அதிக அளவில் எடுத்துக்கொள்ளக் கூடாது. மேலும் அல்சர் புண் உள்ளவர்கள் எலுமிச்சை சாறை  தவிர்க்கவும்.

Trending News

Latest News

You May Like