இது தெரியுமா ? தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால்...
வாழைப்பழங்களில் எண்ணற்ற சத்துக்கள் காணப்படுகிறது. எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப் பழத்தில் பலவகை உண்டு. இதில் நாம் செவ்வாழைப்பழத்தினை பற்றி பாப்போம்.
இதிலும் செவ்வாழை பழம் என்றாலே பல மருத்துவ குணங்கள் கொண்டது. செவ்வாழைப்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உள்ள உயர் தர பொட்டாசியம் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் ஆண்டி ஆக்சிடெண்ட் உள்ளது. இதில் 50 சதவிகித நார்ச்சத்தும் காணப்படுகிறது. செவ்வாழையில் வைட்டமின் ‘சி’ அதிகம் காணப்படுகிறது.
தினமும் இரவு உணவிற்கு பிறகு ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். செவ்வாழை பழம் கல்லீரல் வீக்கம் மற்றும் சிறுநீர் கோளாறை சீராக்கும் சக்தி கொண்டது.
செவ்வாழையில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தம், புற்று நோய், இதய நோய், சிறுநீரக கற்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுபவர்களுக்கு இந்த பிரசினைகள் ஏற்படாது.
எந்த வயதினராக இருந்தாலும் கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஓன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரவு ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 48 நாட்கள் சாப்பிட்டுவர நரம்புகள் பலம் பெறும். நரம்பு தளர்ச்சி குணமடையும்.
மலசிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளிருந்து விடுபடலாம்.
தினமும் ஒரு செவ்வாழை பழத்தினை சாப்பிட்டு வந்தால் இளமையான மற்றும் மின்னும் சருமம் கிடைக்கும். ஏனெனில் இதில் வைட்டமின் ‘சி’ ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
செவ்வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து மன அழுத்தத்தினை கட்டுக்குள் வைத்து, மன அழுத்தம் வராமல் தடுக்கும்.
தொற்று நோய் கிருமிகளை கொல்லும் அரிய சக்தி செவ்வாழை பழத்திற்கு காணப்படுகிறது. வாரம் ஒரு முறை சாப்பிட்டாலே உடலில் தொற்று நோய் பாதிப்பை கட்டுப்படுத்துகிறது.