1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையை சாப்பிடுவதன் மூலம்...

1

ஒரு கையளவு வேர்க்கடலை சாப்பிட்டால் போதும், உங்கள் பசி அடங்கி நீங்கள் நிறைவாகக் காணப்படுவீர்கள்.வேர்க்கடலையில் நம்முடைய உடலுக்குத் தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. 

அவை, புரதச்சத்து, நார்ச்சத்துக்கள், கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், காப்பர், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம், மக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ் ஆகிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்திருக்கின்றன.

𒊹︎ வேர்க்கடலையில் புரதச்சத்தும் நார்ச்சத்தும் அதிகமாக இருக்கிறது. இவை இரண்டுமே உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும்.நார்ச்சத்துக்கள் பொதுவாக ஜீரணத்தை எளிதாக்கவும் சாப்பிட்டதும் வயிறு நிரம்பிய உணர்வையும் தரும். அதனால் அதிகமான கலோரிகள் எடுத்துக் கொள்வதை தவிர்த்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

𒊹︎வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம். வேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது. உடல் பருமன் குறையும்.

𒊹︎வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு. எனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்காது குறையும்.

𒊹︎ பொதுவாக வேர்க்கடலை என்றாலே அதிக கொழுப்பு கொண்டது. அதனால் அதை தவிர்ப்பது தான் நல்லது என்று தான் நம்மில் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் உண்மை என்னவென்றால். வேர்க்கடலையில் உள்ளவை அனைத்தும் நல்ல கொழுப்புகள் தான். அவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியவை.

𒊹︎குறிப்பாக வேர்க்கடலையில் ஓலிக் அமிலம், மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமாக இருக்கின்றன. இவை நம்முடைய உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலின் அளவைக் குறைத்து நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்கச் செய்கிறது.

𒊹︎வேர்க்கடலையில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் சருமத்தை பொலிவாக்கும்.

𒊹︎வேர்க்கடலையில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை அதிக அளவில் இருப்பதால் இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுவதோடு வயதான தோற்றம் ஏற்படுத்துவதை தடுக்கிறது. சரும சுருக்கங்களை நீக்கும்.

பொதுவாக குளிர்காலத்தில் முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் வேர்க்கடலையை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அதன்மூலம் பயோடின் உற்பத்தி அதிகரிக்கும். பயோடின் நம்முடைய தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும்.

𒊹︎வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.

𒊹︎வேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன. அவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப்பை புற்றுநோய் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.

𒊹︎வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதனால் ரத்தம் சீராக ஓடும். ரத்த அழுத்தம் குறையும்.

𒊹︎வேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும். வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. அதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.

𒊹︎எண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும். சுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப்பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.

𒊹︎வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.

Trending News

Latest News

You May Like