1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? பப்பிள் கம் மென்றால் உடல் எடையை கட்டுப்படுத்தலாம்..!

1

நாம் சாப்பிடும் பப்பிள் கம்கள் பலவிதமான நன்மைகளை தருகிறது.

அதாவது வாயில் உள்ள தேவையற்ற துர்நாற்றத்தை மாற்றி வாய்க்கு ஆரோக்கியத்தை தருகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது, குமட்டல் ஏற்படுவதை தடுக்கிறது, ஞாபக சக்தியை அதிகரிக்கிறது, புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட மருத்துவர்கள் கூட பரிந்துரைக்கும் ஒன்றாக பப்பிள் கம் உள்ளது. ஆனால் தற்போது உடல் எடை குறைவதாக மக்களிடையே கருத்து நிலவி வருகிறது. சரி பப்பிள் காம் சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பல்வேறு நிறங்களில், பல வடிவங்களில் விற்பனையாகி வரும் பப்பிள் கம்களை மென்று வந்தால் உடல் எடை குறைவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது தினமும் பப்பிள் கம்மை மென்று வரும் மனிதர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் 68 சதவீதத்தினருக்கு ஒரு குறிப்பிட்ட அளவில் கலோரிகள் குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நேரத்தை பொழுதுபோக்கும் நேரங்கள், ஓய்வெடுக்கும் நேரங்களில் எதையாவது சாப்பிட தோன்றும். அந்த நேரங்களில் பலரும் நொறுக்கு தீனிகளை சாப்பிட்டு எடையை அதிகரிக்கின்றனர்.

ஆனால் பப்பிள் கம் சாப்பிடும் போது அதில் அதிக அளவில் இனிப்புச்சத்து இருப்பதினால், அவர்கள் கூடுதலாக சர்க்கரை சத்து நிறைந்த உணவுப்பொருட்களை தேடி செல்வதில்லை. அதனால் அவர்களது உடலில் கொழுப்பு அதிகம் சேர்வது இல்லை. பப்பிள் கம் மென்று சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், இந்த பழக்கம் இல்லாதவர்களைவிட, 5 சதவீதம் அதிக உடல் கலோரியை எரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் அமெரிக்காவின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், பப்பிள் கம் மெல்லுவதால் பசி உணர்வு அடங்கி நொறுக்குத்தீனி சாப்பிடும் பழக்கம் மற்றும் சிற்றுண்டி வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளும் பழக்கம் குறைவதாக கூறப்படுகிறது.

அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளை சாப்பிட நினைக்கும் போதெல்லாம் ஒரு பப்பிள் கம்மை வாயில் போட்டு மெல்ல துவங்கினால், கலோரி அதிகரிப்பதை தவிர்க்கலாம். மேலும் அதிக உடல் பருமன் கொண்டவர்கள் கலோரி அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட தோன்றும் போதெல்லாம், ஒரு பப்பிள் கம்மை மெல்ல துவங்கலாம். சர்க்கரை இல்லாத பப்பிள் கம்களை தேர்ந்தெடுக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 பப்பிள் கம்களுக்கு மேல் சாப்பிடக் கூடாது. ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது.

ஒருநாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பப்பிள் கம்களை சுவைக்க துவங்கினால், அது நம் உடலுக்கு கெடுதலை விளைவிக்கிறது. ஏனென்றால் இந்த பப்பிள் கம்களில் ஷார்பிடால் என்ற வேதிப்பொருள் அதிகளவில் உள்ளது. இது நம் உடலில் அதிகப்படியாக சேரும் போது, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப்பகுதியில் தீவிர வலி ஏற்படும். மேலும் உங்களுக்கு பப்பிள் கம் மெல்லுவது பிடிக்காது என்றால், உடல் எடை குறைப்புக்காக என்று பப்பிள் கம் மெல்லும் பழக்கத்தை தொடங்கக் கூடாது.

Trending News

Latest News

You May Like