1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் போட்டுக் கொதிக்க வைத்து...

1

நாக்கில் புண் ஆற : அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து குழு நீரில் போட்டு அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.

குடல் புண் ஆற: வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.

உடல் வலிமை பெற : அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும்.

அஜீரணம் சரியாக: ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க நிவர்த்தியாகும்.

மூட்டு வலி குணமாக: அத்தி பாலை எடுத்து பற்றுப் போட்டால் விரைவில் குணமடையும்.

இரும்புச் சத்துக்கு: மாதுளம்பழச் சாற்றில் பால் சேர்த்து சாப்பிட்டால் நிறைய கிடைக்கும்.

சிறுநீரக கோளாறு: முள்ளங்கியை சாறு எடுத்து தினமும் காலை, மாலை 30 மி.லி. சாப்பிட நீங்கும்.

படர்தாமரை, முகப்பரு: சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவி விரைவில் குணமாகும்.

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன நோய் குணமாகும்
  • கொத்தமல்லி கீரை: மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
  • அரைக்கீரை: நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.
  • வள்ளாரை: நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.
  • அகத்திக்கீரை: மலச்சிக்கலைப் போக்கும்.
  • முளைக்கீரை: பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.
  • பொன்னாங்கன்னி: இரத்தம் விருத்தியாகும்.
  • தர்ப்பைப் புல்: இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.
  • தூதுவளை: மூச்சு வாங்குதல் குணமாகும்.
  • முருங்கை கீரை: பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.
  • சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.
  • வெந்தியக்கீரை: இருமல் குணமாகும்
  • புதினா கீரை: மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.
  • அறுகீரை: சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்.

Trending News

Latest News

You May Like