1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? 30 மில்லி நீரில் 6 கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து தேனுடன் கலந்து குடித்து வந்தால்...

1

ஆஸ்துமாவை கட்டுப்படுத்துவதில் கிராம்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. 30 மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து, அதனுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

படுக்கைக்குப் போகும் முன்பு, மூன்று துளி கிராம்பு எண்ணெய், தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து சாப்பிட்டால் ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி குணமடையும்.

கிராம்பு எண்ணெயை தசைப்பிடிப்புள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் தசைப்பிடிப்பு சரியாகும்.

தலைவலி மற்றும் தலைப்பாரத்திற்கு கிராம்பு சிறந்த நிவாரணியாகப் பயன்படுகிறது. கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி சரியாகும். மேலும் தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறையும்.

தொண்டை எரிச்சல், கரகரப்பு சரியாக சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டலாம். மேலும் தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

காலரா குணமாக நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருக வேண்டும்.

கிராம்பு, நிலவேம்பு இவற்றை சம அளவாக எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் உடல் களைப்பு சரியாகும்.

கிராம்பை நீர்விட்டு அரைத்து படைகள் உள்ள இடத்தில் பற்றுப்போட்டால் தோலில் உண்டான படைகள் மறைந்துபோகும்.

சிலருக்கு குறைந்த அளவே உணவை சாப்பிட்டாலும் செரிமானமாகாமல் இருப்பதுபோல தோன்றும். பசியே இருக்காது. இவர்கள் தினமும் உணவில் கிராம்பு சேர்த்துவந்தால் செரிமான சக்தி அதிகரித்து நன்கு பசியெடுக்கும்.

கிராம்புக்கு பாக்டீரியா எதிர்ப்பு சக்தியும் உள்ளதால் இதனை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

Trending News

Latest News

You May Like