1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தினமும் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

1

சமையலைப் பொருத்தவரை பூண்டு மிக முக்கியமான பொருளாகும். பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி மைக்ரோபியல் பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்ற பண்புகள் காணப்படுகிறது. கொலஸ்ட்ராலை கரைப்பதில் பூண்டு மிகச் சிறந்த பங்காற்றுகிறது. இந்த பூண்டு பற்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது நல்ல சீரண சக்தியை நீங்கள் பெற முடியும். டயாபெட்டீஸ் நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இது உதவுகிறது.

சரி வாங்க இந்த பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் எந்த மாதிரியான நன்மைகளை நாம் பெற முடியும் என அறிவோம்.

காலையில் எழுந்ததும் பூண்டு சாப்பிடுவது நல்ல செரிமானத்திற்கு உதவும். பூண்டு உங்க செரிமான கோளாறுகளை தடுக்க உதவுகிறது. இது உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைத்து எடையை குறைக்க உதவுகிறது. எனவே எடை அதிகமாக இருக்கும் நபர்கள் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பூண்டு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. நீரிழிவு நோய், மன அழுத்தம் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்களை அகற்ற இது உதவுகிறது.

பச்சை பூண்டை உட்கொள்வது உடலில் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது. இது உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இது நீரிழிவு நோய் அபாயத்தை தடுக்க உதவுகிறது.

இந்த பூண்டு பற்களை நீங்கள் தேனில் ஊற வைத்து கூட சாப்பிடலாம். தோலுரித்த பூண்டை 10 நாட்கள் தேனில் ஊற வைத்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராட உதவுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது கொழுப்பு மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. பூண்டை உட்கொண்ட பிறகு யாருக்காவது குமட்டல், வாயு, நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே பூண்டு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

1

தினமும் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலினுள் இரத்த உறைவு ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்படும்.

சளி அல்லது இருமலால் அவஸ்தைப்படுபவர்கள், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் அதிலிருந்து விடுபடலாம்.

பூண்டு வாய்வுத் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கும். ஆனால் அதற்காக பூண்டை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. எனவே வாய்வு தொல்லை அதிகமாக இருந்தால், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுங்கள்.

ஒருவர் இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால், புற்றுநோயின் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவது நல்லது. இதன்மூலம் இதய குழாயான தமனிகளில் கொழுப்புக்கள் படிந்து அடைப்பு ஏற்படாமல் இருக்கும். 

பூண்டில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. தினமும் பூண்டு சாப்பிடுவது கண் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவி செய்யும்.

பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் சிறுநீரக பாதை நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே அதை தடுக்க பெண்கள் பூண்டை சாப்பிடுவது நல்லது.

பூண்டு நம் உடலில் உள்ள சில முக்கியமான உடல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் உங்க ஆயுளை நீட்டிக்க உதவுகிறது. எனவே பூண்டை உணவில் சேர்த்து வந்தால் நீண்ட காலம் உயிர் வாழ முடியும்.

Trending News

Latest News

You May Like