1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? இரவு தூங்கும்முன்பு ஒரு ஸ்பூன் சோம்பை, ஒரு டம்ளர் தண்ணீரில்...

1

உண்மையில், பெருஞ்சீரகம் என்றும் அறியப்படும் சோம்புத் தண்ணீர் பல உடல்நலப் பிரச்சினைகளைப் போக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படும் சோம்பு, கை வைத்தியத்தில் முக்கியமான ஒன்று. 

சோம்புத் தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். கண்களின் பலவீனத்தை நீக்கும் என்று நம்பப்படுகிறது.

சோம்பில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், கண்களின் பலவீனத்தை நீக்குவது மட்டுமல்லாமல், கண்களின் வீக்கம் மற்றும் எரிச்சலிலிருந்து நிவாரணம் அளிக்கும். எனவே தினமும் சோம்பை, தண்ணீரில் கலந்து பானமாக எடுத்துக் கொள்வது நல்லது.  

இது தவிர, தோல் பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கிறது சோம்பு. பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பில் உள்ள வைட்டமின் சி சருமத்தை பளபளப்பாக்குவது மட்டுமல்லாமல் கறைகளையும் நீக்கும்.எனவே, தொடர்ந்து சோம்பை தண்ணீரில் ஊறவைத்து குடித்து வருவது ஆரோக்கியத்தை மட்டுமல்ல, அழகையும் மேம்படுத்தும்.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிற்றுவலிக்கு, சுடுநீரில் சோம்பு போட்டு கொதிக்க வைத்து குடித்தால் தீர்வு கிடைக்கும்..

நாம் அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு சிறிதளவு சோம்பை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றங்கள் நீங்கி, பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த பெருஞ்சீரகம் உதவுகிறது.

கருப்பை சார்ந்த குறைபாடுகள், வயிற்றுப்புண், இருமல், மந்தம், மூச்சிரைப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றிற்கு சோம்பு சிறந்த தீர்வைத் தரும்.

சோம்பு தண்ணீர் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற வழிவகுக்கும்.

சோம்பு நீர்: இரவு தூங்கும்முன்பு, ஒரு ஸ்பூன் சோம்பை, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்க வேண்டும். அல்லது, இந்த தண்ணீரை அப்படியே, சோம்பு டீ-யாக போட்டு குடிக்கலாம். இதன் நன்மைகள் என்னவென்று தெரிந்தாலே, அது எந்த அளவுக்கு உடல்குறைய உதவி புரிகிறது என்பதை நம்மால் அறிய முடியும். சோம்பு தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை குறைத்து உடல் எடை குறைய உதவுகிறது.

ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது.. வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரைந்து, தொப்பை குறைந்து சரியான உடல்வாகை தருகிறது. மெட்டாமெலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் சோம்பில் நிறைய உள்ளன.

நார்ச்சத்து அதிகம் உள்ளது.. கண் பார்வை தெளிவடையும்.. வயிற்று உப்புசத்தை தணிக்கும்.. கண்களின் பலவீனத்தை நீக்கும்.. சரும பிரச்சனைகளுக்கும் நிவாரணம் தருகிறது.. தோல் நிறம் மினுமினுப்பு கூட்டும்.. ஒருபக்கம் உடல் எடை குறையும், இன்னொரு பக்கம் சரும அழகும் கூடும்.. இந்த சோம்பு பசியை அடக்கக்கூடியது.. நிம்மதியான தூக்கத்தை பெறமுடியும்.. தண்ணீரில் சோம்பு சேர்த்து கொதிக்க வைத்து, சிறிது வெண்ணெய் கலந்து பாலூட்டும் தாய்மாருக்கு தந்தால், தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.. இன்று கிராமப்புறங்களில் நடைமுறையில் இது உள்ளதாம்..

சிலருக்கு தோல் அழற்சி மற்றும் கொப்புளங்களில், தோலில் வெடிப்பு போன்ற பிரச்சனையை தரலாம்.. அதனால், ஆஸ்துமா போன்ற அலர்ஜி இருப்பவர்கள் இந்த சோம்பு தண்ணீரை குடிக்க வேண்டாம் என்பார்கள். அதேபோல கர்ப்பிணி பெண்கள் சோம்பு தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like