1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? வாழைப்பழத்தை இந்த 3 உணவோடும் சேர்த்து சாப்பிடவே கூடாதாம்..

1

பயணங்களின்போது, மறுக்கமுடியாத வகையில் மிகவும் விரும்பி சாப்பிடப்படும் பழங்களில் ஒன்றாக வாழைப்பழம் இருக்கிறது. இவற்றில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரதங்கள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எந்தவொரு உணவையும் சரியான வழியில் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வதுதான் நல்லது. இல்லையென்றால், அவை பாதிப்பை ஏற்படுத்தலாம்.

வாழைப்பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. அதுதவிர வைட்டமின் சி, புரதம் மற்றும் நிறைய மினரல்களும் இருக்கின்றன.வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிடும்போது ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவி செய்யும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் வாழைப்பழத்திற்கு முக்கியப் பங்கு உண்டு.ஜீரண செயல்பாட்டை அதிகரிக்கச் செய்து, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

  • முட்டை, மீன் மற்றும் மற்ற இறைச்சி வகைகள் எடுத்துக் கொள்ளும்போது அதோடு சேர்த்து வாழைப்பழத்தைச் சாப்பிடக் கூடாது. அப்படி உயர் புரதங்களுடன் வாழைப்பழத்தைச் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது இது ஜீரண மண்டலங்களில் வாய்வை உற்பத்தி செய்யும். அசிடிட்டியை உண்டாக்கலாம். சிலருக்கு கடும் வயிற்று வலியைக் கூட ஏற்படுத்தும்.
  • பச்சை வாழைப்பழத்தையும் பழுத்த வாழைப்பழத்தையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது. பழுத்த வாழைப்பழங்கள் பொதுவாக ஜீரணிக்க எளிதானவை, ஆனால், அவற்றை பச்சை அல்லது பழுக்காத வாழைப்பழங்களுடன் சேர்த்து சாப்பிடுவது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். ஏனெனில் பச்சை வாழைப்பழங்களில் அதிக எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்து உள்ளது. இது ஜீரணிக்க கடினமாக இருக்கும் மற்றும் சிலருக்கு வீக்கம் அல்லது வாயுவை ஏற்படுத்தலாம். .
  • ஸ்வீட்ஸ், இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம் உள்ளிட்ட இனிப்பான உணவுகளைச் சாப்பிடும் போது அதோடு சேர்த்தோ அல்லது அதை சாப்பிட்டு முடித்தவுடன் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாது.அப்படி சாப்பிடும்போது கலோரிகள் அதிகமாகி, சர்க்கரை அளவு அதிகமாகும். உடல் எடை அதிகரிக்கும். சிலருக்கு வயிற்றில் அசௌகரியங்களையும் ஏற்படுத்தக் கூடும்..
  • சிட்ரஸ் பழங்களிலும் அமிலச்சத்துக்கள் இருக்கின்றன. வாழைப்பழத்திலும் அமிலத்தன்மையிலான சத்துக்கள் இருக்கின்றன.இந்த இரண்டுமே ஒன்றாக சேரும் வயிற்றுக்குள் போதும் அது அதீத அமிலத் தன்மையை வெளிப்படுத்தும். இதனால் நிறைய வயிறு அசௌகரியங்களை ஏற்படுத்தும்.

மோசமான பழுப்பு நிற வாழைப்பழம்

1

பழுப்பு வாழைப்பழத்தில் சர்க்கரை சத்து அதிகளவில் உள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு பழுத்த, நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் மொத்த சர்க்கரைகளில் 17.4 கிராம் உள்ளது, அதே அளவு மஞ்சள் வாழைப்பழத்தில் வெறும் 14.4 கிராம் சர்க்கரை உள்ளது. இது சர்க்கரையில் 3 கிராம் அளவுக்கு அதிகரிக்கிறது. ஆப்பிளை ஒப்பிடும் போது வாழைப்பழ சர்க்கரை குறைவு தான். ஆப்பிளில் 19 கிராம் அளவிற்கு சர்க்கரை ஆனது காணப்படுகிறது.

வாழைப்பழத்தில் சர்க்கரை உள்ளடக்கம் அதிகரிக்க இவைகள் தான் காரணம். ஏனெனில் வாழைப்பழத்தில் உள்ள மாவுச்சத்துகள் சிக்கலான கார்ப்ஸ் கொண்டவை. இவை ஆரோக்கியமான எளிய சர்க்கரை பாகங்களாக உடைகின்றன. மஞ்சள் வாழைப்பழத்தில் 6.35 கிராம் ஸ்டார்ச் உள்ளது, அதிகமாக பழுக்கும் வாழைப்பழங்களில் வெறும் 0.45 அளவு ஸ்டார்ச் ஆனது குறைகிறது.

அதிகமாக பழுத்த வாழைப் பழங்கள் செரிமானத்தை குறைக்கும், தினசரி நார்ச்சத்து தேவையில் 1.9 கிராம் அதாவது 7%நார்ச்சத்தை தருகிறது. இதுவே மஞ்சள் வாழைப்பழம் என்றால் 3.1 கிராம் அல்லது 11%நார்ச்சத்தும் கொடுக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு வாழைப்பழங்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை பெற்றிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே வாழைப்பழங்கள் சாப்பிடுவது அவர்களின் இரத்த குளுக்கோஸ் அளவை பாதிப்பது இல்லை என்பதை காட்டுகிறது. எனவே வெள்ளை ரொட்டி சாப்பிடுவதற்கு முன்பு வாழைப்பழங்களை சாப்பிடுவது நல்லது. பழுத்த வாழைப்பழங்களை சாப்பிடுவது உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவிற்கு இன்னும் சிறந்தது. அதிகமாக பழுத்த வாழைப்பழங்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6 மற்றும் வைட்டமின் கே போன்ற சத்துக்கள் குறைகின்றன. 

Trending News

Latest News

You May Like