1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? சளி, இருமலுக்கு தீர்வு தரும் வாழைத்தண்டு ஜூஸ்..!

1

வாழைத்தண்டில் பொட்டாசியம் சத்தானது நிறைந்துள்ளது. எனவே, வாழைத்தண்டை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எந்த நோயும் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது.

கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும். ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரக் கல் கரைக்கும். அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

உடலில் கழிவுகள் சேரும்போது தான் நிறைய பிரச்சினைகளும் வருகின்றன. அதனால் குறிப்பிட்ட இடைவெளிகளில் பேதி போன்றவை கொடுத்து குடலை சுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள்.ஆனால் உடலில் கழிவுகள் சேராமலே, தினமும் சுத்தம் செய்து கொள்வது தான் இன்னும் சிறந்தது. அதற்கு வாழைத்தண்டு உங்களுக்கு உதவி செய்யும்.

வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கும்போது குடலில் உள்ள அமிலத்தன்மை சீராகும். ஜீரண மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.இதனால் நெஞ்செரிச்சல், வயிறு அசௌகரியம் உள்ளிட்ட பிரச்சினைகள் தீரும். வாரத்திற்கு மூன்று நாட்களாவது காலை வெறம் வயிற்றில் இந்த வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வர உடலில் உள்ள கழிவுகள் முழுமையாக வெளியேறும்.

சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்களே டயட்டில் தினமும் வாழைத்தண்டு ஜூஸ் சேர்த்துக் கொள்ள பரிந்துரை செய்கிறார்கள்.சிலர் வாழைத்தண்டு சாறில் துவர்ப்பு அதிகம் இருப்பதால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்வார்கள். அதோடு இரண்டு பச்சை ஏலக்காயை தட்டிப் போட்டுக் குடிக்கும்போது கற்கள் உள்ளிருக்கும்போதும், வெளியேறும்போது ஏற்படுகின்ற வலி கட்டுப்படும்.

மிக்சியில் நறுக்கிய வாழைத்தண்டு, பூண்டு, ஓமவல்லி இலை, வெற்றிலை, துளசி, மிளகு சேர்த்து, நீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து கொள்ளவும்.அரைத்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டிக்கொள்ளவும்.வாரம் ஒரு முறை இந்த சாற்றை அரை டம்ளர் அளவு பருகினால்… சளி, இருமல் தொந்தரவில் இருந்து பாதுகாக்கும்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வாழைத்தண்டு சாறு குடிக்கலாம். வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், வாழைத்தண்டு சாறு குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும்.

வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

வாழைத்தண்டில் இரும்பு மற்றும் வைட்டமின் பி6 சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இரும்பு மற்றும் வைட்டமின் பி6 சத்துக்கள், நம் ரத்தத்தில் உள்ள ஹிமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

வயிற்று உப்பிசம், வயிற்று கோளாறு நீங்கும். கிட்னி ஸ்டோன் உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு சிறந்த பலனை தரும். நீர் கடுப்பு நோய் உள்ளவர்களுக்கு உபாதைகளை நீக்கும். உடல் பருமனாக உள்ளவர்கள்தொடர்ந்து பருகி வர பருமன் குறையும்.

வாழைத்தண்டில் நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் வாழைத்தண்டு ஜூஸை காலையில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடல் எடையையும் விரைவில் குறையும்.

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால், நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்கவேண்டும்.

மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். அதிலும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால், மலச்சிக்கல் உடனே குணமாகும்.

நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க, தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது நல்லது. இப்படி தினமும் குடித்தால், நீரிழிவிற்கான மருந்துகளை எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது.

வாழைத்தண்டு ஜூஸ் சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதனை குணப்படுத்தவும் பெரியும் உதவியாக இருக்கும்.

வாழைத்தண்டு ஜூஸ் செய்முறை: மிக்ஸியில் வாழைத்தண்டை போட்டு, அதில் உப்பு, மிளகு, வறுத்த சீரகம் மற்றும் பிரஷ்ஷான தயிர் சேர்த்து நன்கு அரைத்து, பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி வடிகட்டினால், வாழைத்தண்டு ஜூஸ் தயார். 

வாழைத்தண்டு சாறில் லெமன் ஜூஸ் சேர்த்து குடித்து வந்தால், வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் மற்றும் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் இரண்டும் சேர்ந்து, பொட்டாசியம் சிட்ரேட்டாக மாறி கிட்னியில் கற்கள் உருவாகாமல் பாதுகாக்கும்.

வாழைத்தண்டை சமைத்து அல்லது சாறாக உணவில் தொடர்ந்து ஏதேனும் ஒரு வடிவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக் கழிவுகள் வெளியேறும். உடல் புத்துணர்ச்சியாகவும், லேசாகவும் மாறிவிடும்.

Trending News

Latest News

You May Like