இது தெரியுமா ? கால் தேக்கரண்டி சித்தரத்தை பொடியுடன் 4 பல் பூண்டு, ஒன்றரை தேக்கரண்டி சோம்பு சேர்த்து...
சித்தரத்தையின் பயன்பாடு பற்றி பார்ப்போம்:
நம்மிடையே காணப்படும் சைனஸ் தொல்லை, சளி தொந்தரவு, வயிற்று கடுப்பு, வயிற்று கோளாறு மற்றும் வாயு கோளாறுகளை அகற்ற சித்தரத்தை மிகவும் பயன்படுகிறது. சித்தரத்தை, நமது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. அத்துடன், புற்றுநோய் மற்றும் பிளட் பிரஷர் தாக்கத்தை வெகுவாக குறைக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் சித்தரத்தை காய்ந்த கிழங்காகவும் பொடியாகவும் கிடைக்கிறது.
அரை தேக்கரண்டி சித்தரத்தை பொடியுடன், அதிமதுர பொடி அரை தேக்கரண்டி, சுக்கு, மிளகு, திப்பிலி அடங்கிய திரிகடுக பொடி அரை தேக்கரண்டி கலந்து, அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க விடவும். பின்னர், நன்கு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டவும். அவை காரமாக இருக்கும் என்பதால், அவற்றுடன் சிறிது தேனை கலந்து குடிக்கலாம்.இவற்றை தொடர்ச்சியாக குடித்து வந்தால் மூக்கடைப்பு, நெஞ்சக சளி, ஒற்றை தலைவலி உட்பட சைனஸ் தொந்தரவுகள் அறவே நீங்கும்.
அதேபோல், இவை நம்மிடம் உள்ள கொழுப்பு சத்தை கரைக்கவும், பிளட் பிரஷரை குறைக்கவும் உதவுகிறது. மேலும், நம்மிடையே காணப்படும் நாக்கு வறட்சியை அறவே நீக்கும்.கால் தேக்கரண்டி சித்தரத்தை பொடியுடன் 4 பல் பூண்டு, ஒன்றரை தேக்கரண்டி சோம்பு மற்றும் அரை டீஸ்பூன் சர்க்கரையுடன் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் வடிகட்டி, அத்துடன் தேன் கலந்து குடிக்கலாம்.
இவற்றை தொடர்ச்சியாக குடித்து வந்தால் வயிற்றுக் கோளாறு, வயிற்று புண், வாயு கோளாறு உள்ளிட்ட பல்வேறு நெஞ்சக கோளாறுகள் நீங்கும். விந்தணுக்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் ஆற்றலும் இதற்கு உண்டு
ஆஸ்துமா குணப்படுத்த :சிலர், இரைப்பு இருமல் எனும் ஆஸ்துமா பாதிப்பால், மூச்சடைக்கும் வேதனையை அடைவார்கள். அவர்கள், சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு ஆகிய மூலிகைகளை இலேசாக வறுத்து, அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு, தினமும் இதில் சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டுவர, பாதிப்புகள் விரைவில் நீங்கிவிடும்.
எலும்புகள் பலம் பெற :இந்த பாதிப்புகள் யாவும் நீங்க, நன்கு உலர்ந்த சித்தரத்தை மற்றும் அமுக்கிரா கிழங்கை எடுத்து இடித்து தூளாக்கிக்கொண்டு, இந்தப்பொடியை சிறிது தேனில் குழைத்து தினமும் இருவேளை என ஒரு மண்டலம் என்ற கால அளவில், நாற்பத்தெட்டு நாட்கள் சாப்பிட்டு வர, வெகுநாட்களாக துன்பமளித்த வலிகளின் பாதிப்பு குறையும். எலும்புகளின் ஆற்றல் மேம்படும்.