இது தெரியுமா ? 17 வகை நோய்களை குணமாக்கும் 8 வடிவ நடை பயிற்சி..!
மனிதனுக்குப் பொதுவாக ஒரு பக்க மூளை மட்டுமே வேலை செய்யும். ஆனால், 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொண்டால் இரண்டு பக்க மூளையும் செயல்பட உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மூளை வளர்ச்சி சரியில்லாத குழந்தைகளுக்கு ஸ்பெஷல் சிகிச்சையாக இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை (8 shaped walking exercise) மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 21 நாட்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் மாற்றத்தைக் காணலாம்.
நடைப்பயிற்சி செய்யும் முறை
1.வெறும் வயிற்றில் காலை, மாலை எனத் தலா அரை மணி நேரம் தொடர்ந்து நடக்க வேண்டும்.
2.காலை, மாலை 5 – 6 மணிக்குள் நடப்பது சிறந்தது.
3.சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் நடக்கலாம். கருவுற்றப் பெண்கள், புற்றுநோயாளிகள் இந்த 8 நடைப்பயிற்சியைத் தவிர்க்கவும்.
4.காலில் செருப்பு அணியக் கூடாது. வெறும் காலில்தான் நடக்க வேண்டும்.
5.நடக்கும்போது மெதுவாகவோ வேகமாகவோ நடக்க கூடாது. இயல்பான நடை இருக்க வேண்டும்.
6.நடக்கும்போது பேச கூடாது. மனதில் ஒரே லட்சியத்தை வைத்துக்கொண்டு நடக்க வேண்டும்.
7.முத்திரை செய்ய தெரிந்தவர்கள், கைகளில் பிராண முத்திரையை வைத்துக்கொண்டு நடக்கலாம்; முத்திரை செய்ய தெரியாதவர்கள் சாதாரணமாகவே நடக்கலாம்.
நடைபயிற்சி தீர்க்கும் 17 வகை நோய்
1. அஜீரணம்,
2. மலச்சிக்கல்,
3. இருதயம் சீராகும்,
4. மூச்சு திணறல்,
5. மூக்கடைப்பு,
6. மார்புச்சளி,
7. கெட்ட கொழுப்பு கரையும்,
8. உடல் எடை குறையும்,
9. மனஅழுத்தம்,
10. இரத்த அழுத்தம்,
11. தூக்கமின்மை,
12. கண் பார்வை தெளிவாகும்,
13. கெட்டவாயு வெளியேறும்,
14.சக்கரங்கள் சமநிலையில் இயங்கும்,
15.தலைவலி, பின்பக்க தலைவலி சரியாகும்,
16.குதிகால் வலி, மூட்டு வலி, சரியாகும்,
17.சர்க்கரை நோய் சரியாகும்.
இத்தனை சிறப்புகள் நிறைந்த 8 வடிவ நடைப்பயிற்சியை உங்களின் வாழ்வியல் பழக்கமாக மாற்றிக்கொள்வது சிறப்பு.
முக்கிய குறிப்பு
கர்ப்பிணிப் பெண்கள் இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது.