1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? நாம் குடிக்கும் தண்ணீரால் நம் உடலில் ஏற்படும் ஏழு அற்புதங்கள்..!

1

 1)   தண்ணீர் உங்கள் உடலை சிலிம்மாக வைத்துக்கொள்ள உதவும்...
உடல் எடையைக்குறைக்க விரும்புகிறீர்களா?... அதில் தண்ணீரின் பங்கு அலாதியானது.

கலோரியுடன் கூடிய பல்வேறு குளிர்பானங்கள், ஜூஸ்கள் ஆகியவற்றிற்கு பதில் தண்ணீரை குடித்து உங்கள் தாகத்தை தணித்துக்கொள்ளப் பழகுங்கள். அதே போல உணவருந்தும் முன்னர் ஒரு டம்ளர் தண்ணீரை பருகுவது உங்களுக்கு விருப்பமான உணவாக இருந்தாலும்கூட உங்களை அளவுக்கு அதிகமாக உண்ண விடாமல் வயிறு நிரம்பியதொரு உணர்வைக்கொடுத்து உங்கள் டயட்டுக்கு பெரிதும் உதவும்.
தண்ணீர் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு பெரிதும் உதவக்கூடியது. உதாரணத்திற்கு நீங்கள் கொஞ்சம் குளிர்ந்த தண்ணீரை குடிக்கும்போது உங்கள் உடல் அந்த தண்ணீரை சமவெப்பநிலைக்கு கொண்டுவர மேற்கொள்ளும் உழைப்பில் ஒரு சில கலோரிகள் எரிக்கப்படுமாம்...

2)   தண்ணீர் உங்கள் எனெர்ஜியை அதிகப்படுத்தும்...
உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையும்போது(டிஹைட்ரேஷன்) பெரிதளவு சோர்வு உண்டாகும்.

தண்ணீர் உங்கள் உடலில் இரத்தம் எடுத்துச்செல்லும் ஆக்ஸிசனையும், செல்களுக்குத்தேவையான அத்தியாவசிய சத்துக்களையும் கொடுத்து உதவுகிறது.

நீங்கள் சரியான அளவு தண்ணீர் அருந்துவதால் உங்களது இதயம் இரத்தத்தை உடல் முழுவதும் பம்ப் செய்வதற்கு வழக்கத்தைவிட அதிக அளவு வேலை செய்ய வேண்டியதிருக்காது.

3)   தண்ணீர் உங்கள் உடல் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும்...
உங்கள் மூளையின் 70 முதல் 80% திசுக்கள் தண்ணீர் கொண்டதுதான்... உங்கள் உடலில் நீர்ச்சத்து குறையும்போது உடல் மற்றும் மனது இரண்டுமே அழுத்தத்திற்கு ஆளாகும்.


நீங்கள் தண்ணீர் தாகத்துடன் இருக்கிறீர்கள் என்றால் ஏற்கனவே உங்கள் உடல் டிஹைட்ரேஷன் ஆகத்தொடங்கிவிட்டது என்றுதான் அர்த்தம். அதனால் எப்போதுமே உங்கள் மேஜையில் ஒரு டம்ளர் தண்ணீரை வைத்துக்கொள்வதோ... இல்லை... உங்களுடன் தண்ணீரை சிப் பண்ணிக்குடிக்க ஒரு ஸ்போர்ட்ஸ் பாட்டிலை வைத்துக்கொள்வதோ மிகச்சிறந்தது.
தண்ணீர் குடிப்பது தசை சுருங்குதலை தடுப்பதோடு, உடலின் அனைத்து இணைப்புகளிலும் சிறந்ததொரு லூப்ரிகண்ட்ஸாக செயல்படவும் உதவும்.

4)   தண்ணீர் உங்களது பொலிவைக் கூட்டும்...
தண்ணீர் இயற்கை கொடுத்த ஒரு அழகு கிரீம் என்று சொன்னால் மிகையல்ல. சரியான அளவில் தண்ணீர் அருந்துவது தோலின் செல்களுக்கு நல்ல பலன்களை அளித்து உங்கள் முகத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும்.

தண்ணீர் உங்கள் உடலிலிருந்து அசுத்தங்களை அகற்றுவதோடு, இரத்த ஓட்டத்தையும், சுத்திகரிப்பையும் அதிகரித்து உங்களுக்கு முகப்பொலிவை வழங்குகிறது.

5)   தண்ணீர் உங்கள் உடலின் சரியான செரிமாணத்திற்கு உதவும்...
சரியான செரிமாணத்திற்கு நார்ச்சத்துக்களுடன், தண்ணீரும் மிக அவசியமானதாகும்.
தண்ணீர் உணவின் தேவையற்ற பகுதிகளை கரைத்து மெதுவாக செரிமாணத்தின் மூலம் உடலை விட்டு அகற்றுகிறது.
உங்கள் உடல் டிஹைட்ரேட் ஆகும்போது உடலின் எல்லா பாகத்திலுமிருந்து நீர்ச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டு காலியாகிவிடுவதால் உடலில் உள்ள தேவையற்றவற்றை நீக்குவது கடினமாகிப்போகும்.

6)   தண்ணீர் உங்கள் கிட்னியில் கற்கள் உண்டாவதை தடுக்கும்...
மிகுந்த வலியையும், வேதனையையும் கொடுக்கும் கிட்னி கற்கள் இன்று பரவலாக அதிகரித்து வருவதன் முக்கிய காரணம்... பெரியவர்களும் குழந்தைகளும் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலிருப்பதுதான்...

சரியான அளவில் அருந்தும் தண்ணீர் உங்களது யூரினில் உள்ள சால்ட் மற்றும் மினரல்ஸை கரைத்து வெளியேற்றிவிடுவதால் அவைகளால் உருவாகும் சாலிட் கிரிஸ்ட்டல்ஸ் எனப்படும் கிட்னி கற்கள் உருவாகாமல் தடுக்க முடியும்.
நன்றாக டைல்யூட் செய்யப்பட்ட யூரினால் கிட்னி கற்கள் உண்டாகும் வாய்ப்பு மிகக்குறைவு என்பதால் முடிந்த அளவு தண்ணீரை பருகுவது நலம்.

  7)   நீங்கள் தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா?...
பொதுவாக நியூட்ரிசியன்களால் நமக்கு பரிந்துரைக்கப்படுவது 8X8 என்ற ரூல்ஸ்தான்...

தினமும் 8 அவுன்ஸ் கிளாஸ் தண்ணீர் குடிப்பது கட்டாயமாகும்.
நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போதும், அதிக அளவு வியர்வையில் நனையும் போதும் வழக்கத்தை விடவும் அதிகமாக தண்ணீர் அருந்துவது மிக அவசியம்.
ஆகவே மக்களே... எண்ணற்ற நோய்களும், உடல் பருமன் பிரச்சினைகளும் ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் இந்தக்காலத்தில் இயற்கையே கொடுத்திருக்கும் வரப்பிரசாதமான தண்ணீரை தவறாமல், சரியான அளவில் தினந்தோறும் பருகி நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சந்தோஷமாய் நீங்களும் வாழ்ந்து, உங்கள் வருங்கால சந்ததியினரையும் அவ்வாறே வாழப்பழக்குங்கள்...

Trending News

Latest News

You May Like