1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தாய்ப்பால் அதிகரிக்க கூடிய 6 எளிய உணவுகள்..!

1

குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பால் மூலமாக மட்டுமே கிடைக்கிறது. அதனால் தான் குழந்தைகளுக்கு குறைந்தது  ஆறு மாதம் வரையாவது கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியமாகும். சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனை இருக்கும். அவர்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காது. இதற்கு எல்லாம் காரணம், ஊட்டச்சத்து குறைபாடு மட்டும் தான்.  இந்த பகுதியில் தாய்ப்பால் சுரப்பிற்கு உதவும் உணவு வகைகளை பற்றி காணலாம்.

பேரிச்சம் பழம்

பேரிச்சையில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளதால் இதனை குழந்தைப் பிறப்பதற்கு முன்பும் பின்பும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

நட்ஸ்

பாலூட்டும் பெண்கள் பாதாம் சாப்பிடுவது மிகச்சிறந்தது. பாதாம், வால்நட்ஸ், வேர்க்கடலை ஆகியவை பாலூட்டும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இது அதிக அளவு ஊட்டச்சத்துகளையும், புரோட்டின் மற்றும் கால்சியத்தையும் தருகிறது.

பூண்டு

பூண்டை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம். அதிகம் பூண்டு சேர்த்து தயாரிக்கப்பட்ட சூப் மிதமான சூட்டுடன் அருந்தி வந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும்

பால்

பால் அதிகளவு சத்துக்களை கொண்டுள்ளது. பிரசவித்த பெண்கள் தினமும் 5 அல்லது 6 கப் பால் குடித்தால் குழந்தைகளுக்கு அதிக அளவு தாய்ப்பால் கிடைக்கும்.

பால் சுறா

அசைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால், நீங்கள் கடலில் கிடைக்கும் பால்சுறா மீனுடன் பூண்டு சேர்த்து புட்டு போல் உண்டால் பால் சுரப்பு அதிகமாகும்.

முருங்கை கீரை

முருங்கை கீரையில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. முருங்கை கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகரிக்கும். 

Trending News

Latest News

You May Like