1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? ஒரு டிராகன் பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் 12 நன்மைகள்..!

1

1. சருமத்தை அழகாக்குகிறது:-

தற்போதைய காலத்தில் வயதில் சிறியவர்களின் சருமங்கள் சுருங்கி முதுமையடைந்தவர்கள் போல தோற்றமளிக்கிறது. எனவே டிராகன் பழத்தை சாப்பிடுவதன் மூலம் சுருக்கங்கள் ஏற்படாமல் இளமையான தோற்றத்தை பெறலாம். ஏனெனில், டிராகன் பழத்தில் உள்ள வைட்டமின் C மற்றும் வைட்டமின் E சரும சுருக்கங்களை போக்கி அழகாக வைத்துக் கொள்ளும். மேலும் இதில் உள்ள நீர்ச்சத்து கருமத்தை ஈரப்பதமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்கிறது. டிராகன் பழத்தை சாப்பிடுவதன் மூலம் பருக்களை சரி செய்யலாம். எனவே பெண்கள் தங்களை அழகாக மற்றும் சருமத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள இப்பழத்தை சாப்பிடலாம்.

2. நோய் எதிர்ப்பு சக்தி:-

பொதுவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படுகிறது. எனவே டிராகன் பழம் சாப்பிடுவதால் பல நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். ஏனெனில், இதில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது. அதுமட்டுமில்லாமல் சளி மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இதில் இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.

3. கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது:-

கர்ப்பிணி பெண்கள் டிராகன் பழம் சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகை நோய் வராமல் தடுக்கலாம். ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான இரும்பு சத்து இரத்த சிவப்பு அணுக்களை அதிகரித்து இரத்த சோகை வராமல் தடுக்கிறது. மேலும் டிராகன் பழத்தில் கால்சியம் அதிகமாக இருப்பதால் கருவில் உள்ள குழந்தையின் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அது மட்டுமில்லாமல் குழந்தை வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு சத்துக்களை கொண்டுள்ளது. எனவே, இதை உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ளவும்.

4. எடையை குறைக்க உதவுகிறது:-

 டிராகன் பழத்தினை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். ஏனென்றால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கலோரி இல்லாத உணவுகளை சாப்பிட வேண்டும். டிராகன் பழத்தில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. இந்த பழத்தை சாப்பிடுவதால் முழுமையாக சாப்பிட்டு வயிறு நிரம்பியது போல் உணர்வை தரும். இதனால் உடலில் பசி ஏற்படாமல் உணவினை உட்கொள்ள மாட்டோம். எனவே உடலில் எடையானது குறையும். மேலும் இந்த பழம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கிறது.

5. இரத்தத்தின் உற்பத்தியை அதிகரிக்கிறது:-

 டிராகன் பழத்தை சாப்பிடுவதன் மூலம் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க முடியும். ஏனெனில், டிராகன் பழத்தில் அதிகப்படியான இரும்பு சத்துக்கள் உள்ளது. இரும்புச்சத்து அதிகம் உள்ள இந்த டிராகன் பழத்தை சாப்பிடுவதன் மூலம் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. இந்த உடலில் இரத்தம் குறைவதால் உடல் சோர்வு மற்றும் உடல் பலவீனமாகி இரத்தசோகை நோய் ஏற்படுகிறது. எனவே, இது போன்ற இரத்தசோகை நோய் வராமல் தடுக்க டிராகன் பழம் சாப்பிடலாம்.

6. நீரிழிவு நோயளிகளுக்கு நல்லது:-

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான உணவை தேர்ந்தெடுப்பது அவசியம். ஏனெனில் அவர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சில பழங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அவற்றில் சிறந்த பழங்களில் ஒன்று தான் டிராகன் பழம். இதை சாப்பிடுவதால் இரத்தச் சர்க்கரை அளைவை கட்டுக்குள் வைப்பதோடு உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது. மேலும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க டிராகன் பழம் சாப்பிடுவது நல்லது.

 

7. புற்றுநோயை தடுக்கிறது:-

மனிதர்களை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்றுதான் புற்றுநோய். டிராகன் பழம் சாப்பிடுவதால் புற்றுநோய் வருவதை தடுக்கலாம். டிராகன் பழத்தில் கரோட்டின் மற்றும் லைகோபீன் என்ற ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளது. இவை நம் உடலில் புற்றுநோய் தாக்காமல் தடுக்கிறது. மேலும் ப்ரோஸ்டேட் புற்றுநோய் கட்டிகள் வளராமல் தடுக்க உதவுகிறது. எனவே புற்று நோய்கள் தாக்காமல் இருக்க விரும்புபவர்கள் மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோயை குணப்படுத்த டிராகன் பழத்தை சாப்பிடலாம்.

8. எலும்பின் வளர்ச்சிக்கு உதவுகிறது:-

மனிதர்கள் வயதாக வயதாக பல்வேறு காரணங்களால் எலும்புகள் பலவீனமடைகிறது. எலும்புகளின் வளர்ச்சிக்கு முக்கியமான சத்துக்களில் ஒன்றுதான் கால்சியம். அந்த கால்சியம் சத்து குறைவாக இருப்பதால் எலும்புகள் பலவீனமடையும். எனவே கால்சியம் சத்து நிறைந்த உணவு சாப்பிடுவதன் மூலம் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்யமுடியும். எனவே, கால்சியம் அதிகம் நிறைந்த இந்த டிராகன் பழத்தை சாப்பிடுவதன் மூலம் எலும்பு வலுப்பெற்று மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

9. கண்களுக்கு நல்லது:-

 

டிராகன் பழமானது கண் ஆரோக்கியத்திற்கு உதவும் பல பயன்களை கொண்டுள்ளது. டிராகன் பழத்தில் அதிகப்படியான பீட்டா கரோட்டின் உள்ளது. கண்ணின் ஆரோக்கியத்திற்கு பீட்டா கரோட்டின் மிக மிக அவசியம். இது கண் புரை,மாகுலர் சிதைவு, கண் எரிச்சல் மற்றும் கண்ணில் நீர் வடிதல் போன்ற பல வகையான கண் சம்பந்தமான நோய்களை சரி செய்கிறது. எனவே, கண்களுக்கு எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாக்க டிராகன் பழத்தை சாப்பிடுவது நல்லது.

10. இதயத்திற்கு நல்லது:-

டிராகன் பழமானது இதயத்தினை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்கிறது. ஏனெனில் டிராகன் பழத்தில் உள்ள கருப்பு நிற விதைகளில் காணப்படும் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 போன்ற அதிகப்படியான கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்க டிராகன் பழம் உதவுகிறது.

11. கொழுப்பினை குறைக்கிறது:-

 டிராகன் பழமானது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. டிராகன் பழத்தில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 அமிலங்கள் அதிகமாக காணப்படுகிறது. இவை உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. இவ்வாறு தேவையற்ற கொழுப்பை குறைப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.மேலும், கொழுப்பு குறைவதால் இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.

12. மலச்சிக்கல் மற்றும் செரிமானத்திற்கு நல்லது:-

 டிராகன் பழமானது வயிறு சம்பந்தமான பல பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. ஏனென்றால் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து கடினமான மலச்சிக்கலை வெளியேற்ற உதவுகிறது. இதனால் செரிமான உறுப்புகள் சரியாக செயல்பட்டு செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது. மேலும் டிராகன் பழம் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே செரிமான பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் உள்ளவர்கள் டிராகன் பழம் சாப்பிடலாம்.

Trending News

Latest News

You May Like