மலையாளிகள் அழகாக இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா..?

மலையாளிகள் அழகாக இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா..?

மலையாளிகள் அழகாக இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா..?
X

அனைவருக்கும் தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்றும், தங்கள் அழகைப் பார்த்து அனைவரும் பாராட்ட வேண்டும் என்றும் ஆசைப்படுவது இயல்பு தான் . அதுவும் பெண்கள் என்றால் அழகுக்காக அதிகமாக மெனக்கெடவும் செய்வார்கள்.
எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கவும் செய்வார்கள். மாசு மரு இல்லாத முகத்தைப் பெற வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு உண்டு.

அதே நேரத்தில், மலையாளிகள் மிகவும் அழகாகவும்,கவர்ச்சியாகவும் இருப்பார்கள் அவர்களின் ரகசியம் என்ன தெரியுமா..? கேரள மக்கள் அங்கு விளையும் தேங்காயை எண்ணெய் எடுத்து, தலை முதல் பாதம் வரை, தேங்காய் எண்ணையைத் தேய்த்து ஓடும் ஆற்றில் குளிப்பது அவர்களது வழக்கம். அதுதான் அவர்களது உடல் நிறத்திற்கும், பளபளப்பிற்கும் காரணம். அவர்கள் சமையலுக்கு தேங்காய் எண்ணையை அதிகமாக பயன்படுத்துறாங்க.

கேரள மக்கள் நடைமுறையில் அதிகம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் நாம் அழகை மெருகேற்றலாம் தெரிந்து கொள்வோம்.

தேங்காய் எண்ணெயில் முகம் கழுவலாம் :அடுப்பில் வாணலியை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் விட்டு சிறிதளவு பேக்கிங் சோடாவை சேர்த்து சூடாக்கினால் இயற்கையான பேஸ் வாஷ் ரெடி..இதனை பயன்படுத்தி தினமும் காலை, மாலை ஒரு முறை முகம் கழுவ முகம் மிகுந்த பொலிவு அடையும்.

லிப் பாம்மாகவும் பயன்படுத்தலாம்:-குளிர் காலத்தில் உதடு வறட்சி அடையும் போது ஏதாவது ஈரப்பதம் நிறைந்த பொருளை பயன்படுத்தினால் உதடு மென்மையாக இருக்கும். இதற்கு கெமிக்கல் உள்ள பொருளை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையால் தயாரான பொருளை பயன்படுத்துவது நல்லது.

இதனால் தேங்காய் எண்ணெயை உதடு வறட்சி அடையும் பொழுது தடவி வந்தால் உதடு சிவப்பாகவும்,மென்மையாகவும் இருக்கும்.

எண்ணெய் குளியலுக்கு பயன்படுத்தலாம் :- நாம் நல்லெண்ணெய் தேய்த்து எண்ணெய் குளியல் செய்வோம். அதற்கு பதிலாக தேங்காய் எண்ணெயைத் தேய்த்து எண்ணெய் குளியல் செய்யலாம்.

இதனால், முடி சிக்கிரம் நரைக்காது. உதிராது. நன்றாக வளரும். பெண்களுக்கு முடி அதிகமாக சிக்கல் விழாது. இயற்கையாகவே முடி ஒருவித பளபளப்புடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.இந்த தேங்காய் எண்ணெய் குளியலால் தான் மலையாளிகள் ஒருவித பளபளப்போடு நீண்ட கருப்பான கூந்தலோடு, அழகாக இருக்கிறார்கள்.

கடையில் விற்கும் ஏதேதோ பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல் வீட்டிலேயே இதுபோன்ற இயற்கை குணம் கொண்ட தேங்காய் எண்ணெய் நீங்கள் பயன்படுத்தலாம். இதன்மூலம் உங்கள் முடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

newstm.in

Next Story
Share it