யோகாவின் வரலாறு தெரியுமா?

யோகாவின் வரலாறு தெரியுமா?

யோகாவின் வரலாறு தெரியுமா?
X

யோகாசனம் என்ற கலை, உலகம் முழுவதும் ஏராளமானோரால் பின்பற்றப்படுகிறது. யோகாசனம் செய்தால் பல்வேறு நோய்கள் நம்மை விட்டு செல்லும் என்பது உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் நம் நாட்டில் கடந்த சில ஆண்டுகள் வரை யோகாசனம் குறித்த போதிய விழிப்புணர்ச்சி இல்லாமல் இருந்தது. கடந்த 2014ம் ஆண்டு ஐநா சபையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி யோகாசனத்தின் பெருமைகளை கூறி உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து 2015ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி யோகா தினமாக கொண்டாடப்படுகிறது.

யோகா எங்கிருந்து உருவானது, யாரால் உருவாக்கப்பட்டது என்ற சரியான வரலாறு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.ஆனால் எங்கிருந்து வழிவழியாக வந்தது என்பது மட்டும்,  மட்டும் தொல்பொருளியல் நிபுணர்களின் வரலாற்றுக்கான ஆய்வுகளில் கிடைத்த சில தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அவைகள் ஹரப்பா கலாச்சாரத்தின் ஆரம்ப காலத்தையும், முழுமையாக வளர்ச்சியடைந்த காலத்தையும், அதற்கு பிந்திய காலத்தையும் சேர்ந்தவை.

யோகாவின் வரலாறு என்ன தெரியுமா?

1921-ம் ஆண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த சுடுமண் முத்திரைகளில், சித்தாசனத்தில் அமர்ந்திருக்கும் சித்தன் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு சுடுமண் முத்திரை கிடைத்துள்ளது. அது 4,500 முதல் 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்பொருளியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முனிவர்களான பதஞ்சலி மற்றும் திருமூலர் ஆகிய இருவரும் யோகக்கலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர்.

அவர்கள் தங்களின் அனுபவத்தின் மூலம் கிடைத்த தகவல்களை பாடல்களாகவும், சூத்திரங்களாகவும் எழுதிவைக்கப்பட்டவைகள்தான் இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

அமச்சமுனி, வான்மீகர், சுந்தரானந்தர், கொங்கணர், குதம்பை சித்தர், கோரக்கர், சிவவாக்கியர், போகர், ஆகிய சித்தர்களின் முயற்சியால் யோகாசனம் மேம்படுத்தப்பட்டது.

யோகாவின் வரலாறு என்ன தெரியுமா?

பதஞ்சலியின் யோகசூத்திரம் எனும் தொகுப்பில் 195 சூத்திரங்கள் மூலம் யோகம் என்றால் என்ன என்றும், அதை எட்டு அங்கங்களாக பிரித்தும் கூறியுள்ளார்.

அதே போல கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் வாழ்ந்த தமிழ்சித்தரான திருமூலர் தனது திருமந்திரத்தில் மூன்றாவது தந்திரத்தில்  அட்டாங்க யோகம் என தமிழில் விவரிக்கிறார்.

அதில் 549 முதல் 631 – ம் பாடல்கள் மூலம் அட்டாங்க யோகத்தின் பயிற்சி முறைகளையும், 632 முதல் 639 – ம் பாடல்கள் மூலம் யோகத்தின் பலனையும் பற்றி கூறுகிறார்.

இவர்களின் அனுபவத்தின் கூற்றுதான் இன்றுவரை புழக்கத்தில் உள்ளது. இவர்களின் பாடல்களின் காலத்தைவைத்து பார்க்கும்போது யோகம் 2,000 ஆண்டுகளுக்கு முன்னே எதை செய்தால் என்ன பலன் என்பதையும், இதன் மூலம் எந்த உறுப்பு நன்கு வேலை செய்யும் என்பதையும், எதை எப்படி செய்யவேண்டும் என்பதையும் தங்கள் அனுபவத்தை வைத்து எழுதியுள்ளது தெரிகிறது. 

newstm.in

Next Story
Share it