உள்ளாடை போடுவதால் என்ன நன்மை தெரியுமா?ஆய்வில் தகவல்!!
பெண்களின் உள்ளாடை குறிப்பாக பிரா அணிவதால் ஏதேனும் நண்மை உள்ளதா என்று ஜீன் டெனிஸ் ரௌலியன் என்ற ஆய்வாளர் ஒருவர் 15 ஆண்டுகள் ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

உள்ளாடை என்பது வழக்கமாக நாம் அணியும் ஆடையைப் போன்று இல்லை... அது நம் இனப்பெருக்க உறுப்புக்களின் பாதுகாப்பு கவசங்கள் என்றுதான் பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். உண்மையில், உள்ளாடை அணிவதால் ஆரோக்கியம் எந்த விதத்திலும் மேம்படாது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும், இறுக்கமாக உள்ளாடை அணிவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
பெண்களின் உள்ளாடை குறிப்பாக பிரா அணிவதால் ஏதேனும் நண்மை உள்ளதா என்று ஜீன் டெனிஸ் ரௌலியன் என்ற ஆய்வாளர் ஒருவர் 15 ஆண்டுகள் ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
► அவரது ஆய்வின்படி, பிரா அணிவதன் மூலம் பெண்களின் மார்பகங்களுக்கு கூடுதல் நன்மை எதுவும் கிடைப்பதில்லை. இதற்கு மாறாக தீய விளைவுகள் தான் ஏற்படுகின்றன.
► பெண்கள் பிரா அணியாமல் இருந்தால் என்ன ஆகும்? என்பதற்கு இந்த ஆய்வில், 18-35 வயதுக்குட்பட்ட பிரா அணியாமல் வாழ்ந்து வரும் பெண்களிடமிருந்து சில தரவுகளை பெற்றுள்ளார். அதன்படி, இவர்களுக்கு மார்பக பகுதியில் இயற்கையாக வளரக் கூடிய திசுக்கள் ஆரோக்கியமாக வளர்ந்து, அவர்கள் மார்பகத்திற்கு ஆரோக்கிய நன்மைகள் விளைவித்துள்ளன என அவர் கூறியுள்ளார்.
► தினமும் பிரா அணிபவர்களை கேட்டபோது, அவர்களுக்கு பிரா அணிவதனால் அதன் இறுக்கம் காரணத்தால், இயற்கையாக வளரும் அந்த திசுக்களின் வளர்ச்சி தடைப்பட்டு, மார்பகத்தின் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இதனால், பிரா அணிவதால் மேலும், மார்பகங்கள் தொங்கும் நிலையை தான் அடையும் என்றும் ரௌலியன் கூறியுள்ளார்.
newstm.in