1. Home
  2. ஆரோக்கியம்

கோழிக்கறி, மட்டன், மாட்டுக் கறி, எப்படி வாங்குவது தெரியுமா?

1

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கறி கடைகளில் கூட்டம் அலைமோதும். சிலருக்கு கறி எப்படி வாங்க வேண்டும் என்பது தெரிந்திருக்கும். சிலருக்கு தெரியாது. இதனால் தெரியாதவர்களுக்கு நன்றாக இல்லாத கறியை கொடுத்து சில கடைக்காரர்களும் ஏமாற்றிவிடுவார்கள்.

கோழிக்கறி, மட்டன், மாட்டுக் கறி, எப்படி வாங்குவது தெரியுமா?

கோழிக்கறி

பிராய்லர் கோழியாக இருந்தால் பேக் சைடு மட்டும் வாங்கவும் அதுதான் கறி சாப்ட் ஆக இருக்கும். ரொம்ப வெள்ளையாகவும் இல்லாமல் ரொம்ப சிகப்பாகவும் இல்லாமல் இளம் சிவப்பு கறி வாங்கவும். பொதுவாக எல்லோரும் தோல் உரித்து வாங்குவார்கள் அது நல்லது தான் ஆனா குழம்பு டேஸ்டாக இருக்காது. கொஞ்சம் தோலுடன் இருப்பது நல்லது தான். பிராய்லர் கோழியை விட பண்ணை நாட்டு கோழி பெஸ்ட்.

மட்டன் 

வெள்ளாட்டுக் கறிதான் பெஸ்ட். அதில் நெஞ்சு பகுதி மற்றும் முன்தொடை நன்றாக சாஃப்ட்டாக இருக்கும். எக்காரணத்தைக் கொண்டும் பின்தொடை கறி வாங்க வேண்டாம். குடல் வாங்கினால் அதனை தனியாக செய்யவும் அதனுடன் மற்ற பார்ட்ஸ் சேர்க்க வேண்டாம்.

மாட்டுக்கறி 

மாட்டுக்கறி எப்போ வாங்கினாலும் கழுத்துப் பகுதி ( Boneless) என்று கேட்டு வாங்குங்கள். RUMP PART கறி கிடைத்தால் ரொம்ப அல்லது ஆனால் முன்கூட்டியே சொல்லி வைக்க வேண்டும். இதன் எந்த தொடைப்பகுதியும் வாங்க வேண்டாம்.
 

Trending News

Latest News

You May Like