1. Home
  2. ஆரோக்கியம்

100 கலோரிகளை குறைக்க நீங்கள் எத்தனை கிலோமீட்டர் நடக்க வேண்டும் தெரியுமா ?

1

100 கலோரிகளை குறைக்க நீங்கள் கிட்டத்தட்ட 1.5 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்க வேண்டியிருக்கும்.அரை கிலோ கொழுப்பை குறைக்க, நீங்கள் ஏறக்குறைய 3,500 கலோரிகளை குறைக்க வேண்டும். இதுவே, நீங்கள் வேகமாகவும் நீண்ட நேரமும் நடந்தால் இன்னும் அதிக கலோரிகளை கூட குறைக்கலாம். உடல் எடையை நீங்கள் குறைக்க விரும்பினால் கண்டிப்பாக இரவு உணவுக்கு பிறகு நடைப்பயிற்சி மேற்கொண்டு பழகுங்கள். 

இரவு உணவிற்குப் பிறகு நடைபயிற்சி செய்வதன் உடனடி நன்மைகளில் ஒன்று செரிமானத்தில் அதன் நேர்மறையான தாக்கமாகும். இது செரிமான பாதை வழியாக உணவை மிகவும் திறமையாக நகர்த்த உதவுகிறது, அஜீரணம், வீக்கம் மற்றும் அசௌகரியத்தை தடுக்கிறது. உணவுக்குப் பிறகு அடிக்கடி நெஞ்செரிச்சல் அல்லது அமில ரிஃப்ளக்ஸ் அனுபவிப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இரவு உணவிற்குப் பிறகு நடைபயிற்சி என்பது கூடுதல் கலோரிகளை எரிக்கவும், எடையை நிர்வாகவும் ஒரு எளிய வழியாகும். இது அதிகப்படியான கலோரிகளை கொழுப்பாக சேமித்து வைப்பதை தடுத்து ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவும்.

மாலை நேர நடைப்பயிற்சிகள் மனதை லேசாக்கி மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வாய்ப்பை வழங்குகிறது. மென்மையான உடற்பயிற்சி மற்றும் பிரெஷ்ஷான காற்றை சுவாசிப்பது மனதை அமைதிப்படுத்தவும், பதட்டத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த மன நலனை மேம்படுத்தவும் உதவும். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓய்வெடுக்க இது ஒரு சிறந்த வழியாகும்.

இரவு உணவிற்குப் பிந்தைய நடை சிறந்த தூக்கத்தை கொடுக்கும். இது தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட்டு, ஆழ்ந்த, நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க உதவுகிறது. ஏனெனில் உடல் செயல்பாடு தூக்கமின்மை பிரச்சனையை தீர்க்க உதவுகிறது.

குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைவதற்கு இரவு நேர நடை ஒரு சிறந்த வழியாகும். அன்புக்குரியவர்களுடன் நடப்பது உறவுகளை வலுப்படுத்தி, அர்த்தமுள்ள உரையாடல்களுக்கான வாய்ப்பை வழங்குகிறது, இது ஒரு மதிப்புமிக்க சமூக நடவடிக்கையாக மாறும்.

இரவு உணவிற்கு பிந்தைய நடைப்பயிற்சி உட்பட வழக்கமான உடல் செயல்பாடு, மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நினைவாற்றல், செறிவு மற்றும் மனத் தெளிவை மேம்படுத்தும்.

ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என கோல் வைத்து கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கே தெரியாமல் நீங்கள் அதற்கேற்றவாறு செயல்பட ஆரம்பிப்பீர்கள். “சிறு துளி பெருவெள்ளம்” என்பதை போல கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும் உங்கள் உடல் எடை பின்னர் அதிகமாக குறைய தொடங்கும். 

ஒரு பக்கம் உடற்பயிற்சி இன்னொரு பக்கம் செம சாப்பாடு என்றிருந்தால் உங்கள் உடல் எடை கண்டிப்பாக குறையாது. அதனால், டயட்டையும் கண்டிப்பாக பார்த்துக்க்கொள்ளுங்கள். நொருக்கு தீனிகளுக்கு பதில் பழங்கள் மற்றும் காய்கறி சாலட்டுகளை சாப்பிடுங்கள். குளிர் பானங்களுக்கு பதிலாக ஸ்மூதிக்கள் மற்றும் ஃப்ரெஷ் ஜூஸ்களை பருகுங்கள். 

Trending News

Latest News

You May Like