1. Home
  2. ஆரோக்கியம்

வாழை எப்படியெல்லாம் உதவுகிறது தெரியுமா?

1

வாழையிலை குளியல் என்றே, ஆயுர்வேதத்தில் சிகிச்சை முறை உள்ளது.. வாழையிலை குளியல் எடுத்து கொள்வதால், உடம்பிலுள்ள தேவையற்ற நச்சுக்கள் நீங்கும் என்பதுடன், உடல் எடையும் வெகுவாக குறையும்.. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தவும், சிறுநீரக செயலிழப்பை தடுக்கவும், இந்த குளியல் சிகிச்சை தரப்படுகிறது.

அதேபோல, சரும பாதுகாப்பை இந்த வாழையிலைகள் உறுதிசெய்கின்றன.. காரணம், குளிர்ச்சி மிகுதி இலை என்பதுடன், இயற்கையான ஆன்டிபயாடிக் நிறைந்த இலையுமாகும்..

வாழையிலை சாறு, சூரியக் கதிர்வீச்சிலிருந்து வரும் புற ஊதாக்க கதிர்களின் தாக்கத்தால் ஏற்படுகிற சரும பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. அதனால்தான், பெரும்பான்மையான சன் ஸ்கிரீன் லோஷன்களில், இந்த வாழை இலையின் சாற்றினை முக்கிய பொருளாக சேர்க்கிறார்கள்.. இதனால், சருமத்துக்கு அலர்ஜி தொல்லை ஏற்படுத்ததாது.. கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது.. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.. வேனல் கட்டிகள், காயங்கள், சொறி, சிரங்கு, தீப்புண்கள், எரிச்சல், அரிப்பு, போன்ற சரும பிரச்சனைகளுக்கு, வாழையிலையை அரைத்து பூசினாலே நிவாரணம் கிடைக்கும்.. வேர்க்குரு தொந்தரவும் முகத்துக்கு வராது. முகத்தில் ஏற்படும் முதிர்ச்சி தோற்றத்தை தள்ளிப்போடுகிறது இந்த சாறு.

வாழையிலையில் அலட்டாயின் என்ற சத்துதான், சருமத்துக்கு பாதுகாப்பை தருகிறது. நேரடியாக இந்த சாற்றினை தடவாமல், ரோஸ் வாட்டர் அல்லது கற்றாழை ஜெல் கலந்து சேர்த்து பயன்படுத்த வேண்டும். அல்லது தயிருடன் சேர்த்தும் பயன்படுத்தலாம். அல்லது ஐஸ் கட்டிகளை வாழை இலையில் வைத்து மசாஜ் செய்தால் போதும் மிருதுவான மற்றும் அழகான சருமத்தை பெற முடியும்.. அல்லது வாழையிலையில் சாறு எடுத்து, அதை வடிகட்டி ஃப்ரிட்ஜில் ஐஸ்கட்டியாகும்வரை வைத்துவிட வேண்டும். இந்த அந்த ஐஸ் கட்டிகளை சருமத்தில் தேய்த்து வந்தாலே, சருமம் மென்மையடையும்.. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், முக சுருக்கத்தை தள்ளிப்போடுகின்றன..

நாம் சாப்பிடுகின்ற உணவில் தீங்கு விளைவிக்கும் நுண்ணிய கிருமிகள் தொற்றிக் கொள்வதால் உணவு நச்சுத் தன்மை அடைந்து, நமக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. வாழை இலையில் உணவை போட்டு சாப்பிடுவதால், வாழை இலையில் இருக்கின்ற கிருமிநாசினி வஸ்துக்கள் உணவில் இருக்கின்றநீயே கிருமிகளை அழித்து, நோய்களின் பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்து, உடல்நலத்தை மேம்படுத்துகிறது.

நீண்ட காலமாக அலுமினியம் உலோகத்தை பயன்படுத்தி செய்யப்பட்ட பாத்திரங்களில் உணவை சமைப்பது, சாப்பிடுவது போன்றவற்றை செய்வதால் பலருக்கு வயிறு சம்பந்தமான நோய்கள், குறைபாடுகள் ஏற்படுகின்றன. உணவை வாழை இலையில் வைத்து சாப்பிடும் போது, வாழை இலையில் இருக்கின்ற குளோரோஃபில் எனும் வேதிப்பொருள், நாம் சாப்பிடும் உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் இருக்கின்ற புண்களையும் ஆற்றுகிறது.

மன அழுத்தங்கள் அதிகம் இருக்கும் நபர்களுக்கும், உடலில் ஏற்படும் சத்துக் குறைபாடுகள் காரணமாகவும் ஒரு சிலருக்கு பசி உணர்வே இல்லாமல் போகிறது. வாழையிலையில் அடிக்கடி உணவு சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பசி உணர்வு நன்கு தூண்டப்பட்டு, நன்றாக சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. சாப்பிடப்படும் எப்படிப்பட்ட ஒரு உணவுப் பொருட்களும் சுலபமாக செரிமானம் ஆகவும் வழிவகை செய்கிறது.

இக்காலத்தில் நாம் உணவு சாப்பிடும் தட்டுக்கள் போன்றவை பல ரசாயன முறைகளில் தயாரிக்கப்படுகின்றன. இந்த தட்டுக்கள் நெடுநாட்களாக சாப்பிடுபவர்களுக்கு உடலில் சிறிய அளவில் குறைபாடுகள் ஏற்படலாம். அக்காலத்தில் நம் முன்னோர்கள் தினமும் வாழை இலையில் சாப்பிட்டதால் உடலில் எவ்விதமான நோய்களுமின்றி நீண்ட காலம் வாழ்ந்தனர். எனவே தினமும் வாழையிலையில் உணவு சாப்பிடுபவர்களுக்கு நீண்ட ஆயுளும், சுலபத்தில் நோய் ஏற்படாத தன்மையும் உருவாகும்.

வேலைக்கு செல்பவர்கள் மதிய உணவை உலோகம் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்களில் எடுத்துச் செல்வதால் உணவில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, சத்துக்களின் இழப்பு உண்டாகின்றன. இதற்கு பதிலாக வாழை இலையில் தினமும் உணவை கட்டி எடுத்துச் சென்று சாப்பிடுபவர்களுக்கு உணவின் சத்துகள் குறையாமல், முழுவதுமாக கிடைக்க வழிவகை செய்கிறது.

நமது முகத்தில் இருக்கும் கண்கள், நாம் அனைத்தையும் பார்க்க உதவுகிறது. இந்த கண்களின் பெரும்பகுதி நீர்த் தன்மை வாய்ந்த திசுக்களால் ஆனது. கண்களில் ஈரப்பதம் குறையாமல் இருக்கும் பட்சத்தில், கண் பார்வை குறைபாடு, கண் அழுத்தம் போன்ற நோய்கள் உண்டாகாது. வாழை இலையில் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கண்பார்வை குறைபாடுகள் ஏதும் ஏற்படாது.

மனிதர்களின் உடலில் வாய்வு பித்தம் கபம் என்கிற முக்குணங்கள் இருக்கின்றன. இந்த முக்கோணங்களில் ஏதேனும் ஒன்றின் சமநிலைத் தன்மை மாறுபடும் பட்சத்தில் உடலில் நோய்கள் ஏற்படுகின்றன. வாழை இலையில் தினமும் உணவு சாப்பிடுபவர்களுக்கு இந்த மூன்று குணங்களின் சமநிலைத்தன்மை சீராக காக்கப்பட்டு, உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரித்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தீ விபத்தில் சிக்கி மீண்டு உடல்நலம் தேறும் நோயாளிகள், தினமும் பச்சை வாழை இலையில் படுத்துறங்கி வந்தால் தீக்காயங்கள் மிக சீக்கிரத்தில் ஆறும். வாழை இலைகள் தீக்காயங்களில் இருக்கின்ற நச்சுத்தன்மையை அந்த இழுத்துக்கொள்ளும். சிறிய அளவில் தீக்காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெருபவர்கள் தீக்காயம் பட்ட பகுதியில் வாழை இலையை வைத்து, தினமும் கட்டி வந்தால் வெகு சீக்கிரத்தில் வந்து தீ காயங்கள் ஆறும்.

Trending News

Latest News

You May Like