1. Home
  2. ஆரோக்கியம்

உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறதா ? அப்போ நீங்க சாப்பிட வேண்டிய உணவு இது தான்..!

1

பூசணிக்காய் விதைகள் அதில் உள்ள நல்ல விஷயங்கள் நமது உடலில் உள்ள பெரும் பகுதிக்கு உதவியாக அமைகிறது. சிறுநீரக பகுதி, இதயம் சம்பந்தப்பட்ட உறுப்புகள், மற்றும் ஒருசில புற்றுநோய் போன்ற விஷயங்களிலிருந்து நம்மைக் காக்கிறது. இந்த விதைகள் சுலபமாக நமது உணவில் கலந்து சாப்பிட முடியும். இதில் உள்ள முக்கியமான ஏழு பலன்களைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம். இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

பூசணிக்காய் பெரிதாக இருந்தாலும் அதன் விதைகள் மிகவும் சிறியது. சிறியதாக இருந்தாலும் அதன் பலன்கள் மிகவும் பெரியது. முழுக்க முழுக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது தான் பூசணிக்காய் விதைகள். பூசணிக்காய் விதையை நாம் கொஞ்சமாக எடுத்துக் கொண்டாலும் அதன் ஆற்றல் அதிகம். அதில் நல்ல கொழுப்பு மெக்னீசியம் மற்றும் ஜிங்க் உள்ளன. இதனாலேயே பூசணிக்காயின் விதைகள் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

உங்கள் மனதில் நீங்கள் ஆரோக்கியத்திலும் அதிக ஆயுள் காலம் நோய்நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்று நினைத்திருந்தால் முதலில் நமது உணவுப் பழக்க வழக்கத்தைச் சரி செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் அதிக கொழுப்பு இல்லாமல் கட்டுடலுடன் இருக்கவும் வேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்டால் நீங்கள் நிச்சயமாகத் தவிர்க்க வேண்டிய சில உணவுப் பொருட்கள் உள்ளது. தேவையில்லாமல் நொறுக்குத் தீனி தவிர்க்க வேண்டும் சந்தையில் கிடைக்கும் நொறுக்குத்தீனி உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் அதற்குப் பதிலாகச் சத்து நிறைந்த மினரல்கள் நிறைந்த உணவை உங்கள் சாப்பாட்டில் சேர்க்க வேண்டும். அந்த வரிசையில் பூசணிக்காயின் விதைகள் என்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

பூசணிக்காய் விதைகளில் மெக்னீசியம் நிறைந்திருப்பதால் இவை எலும்புகளுக்கு மிகவும் நல்லது. எலும்புகளுக்குத் தேவையான ஒரு முக்கியமான மினரல் ஆனது மெக்னீசியம் மினரல்களை எலும்புகள் உட்கொண்டு அடர்த்தியாகவும் உறுதியாகவும் இருப்பதற்கு உதவுகிறது. சில எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

சிலருக்குச் சரியான நேரத்தில் தூங்குவது என்பது பெரும்பாடாக இருக்கும். நாள் முழுவதும் உள்ள நமது வேலை முறைகள் நமக்கு நல்ல தூக்கத்தைத் தர மறுக்கிறது. மெக்னீசியத்தின் உள்ள டிரைடோபன் என்னும் வேதிப்பொருள் நல்ல தூக்கத்தை வரவழைக்கிறது. மேலும் பூசணிக்காய் விதைகளில் மெக்னீசியம் உள்ளதால் அது இன்சோம்னியா போன்ற தூக்கமின்மை வியாதிகளிலிருந்து நம்மளை விடுவிக்கிறது.

பூசணிக்காய் விதைகள் ஆனது உடலிலுள்ள சர்க்கரையின் அளவை சீராக்கி நீரிழிவு நோயிலிருந்து நம்மைக் காக்க உதவுகிறது. வெளிநாடுகளில் நடந்த ஒரு ஆய்வின்படி அதிக சர்க்கரை இருந்த எலிகளுக்கு பூசணிக்காயின் விதைகள் அளிக்கப்பட்டது ஆய்வின் முடிவில் சர்க்கரையின் அளவு குறைந்து எலிகள் ஆரோக்கியமானது கண்டுபிடிக்கப்பட்டது.

பூசணிக்காய் விதைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், மெக்னீசியம் மற்றும் ஃபேட்டி ஆசிட்டுகள் இதயத் துடிப்பிற்கு மிகவும் நன்மை விளைவிக்க கூடியது. மேலும் இதில் மோனோசாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் இருப்பதால் இது நம் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. மேலும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகப் படுத்துகிறது. இது இதயம் ஆரோக்கியமாக இயங்க பெருமளவில் உதவி செய்கிறது.

பூசணிக்காய் விதைகளை நம் உணவில் கலந்து சாப்பிடும் பொழுது, பூசனிக்காய் விதைகளில் உள்ள ஒரு காரணி ஆனது நமது பசியின்மையைக் குறைத்து வயிறு நிறைந்தது போல் ஒரு உணர்வை உண்டுபண்ணுகிறது. எனவே தேவையில்லாத நேரங்களில் உணவு அருந்துவதை நாம் தவிர்க்கிறோம் இதனால் உடல் எடை குறைப்பதற்குப் பெரிதும் உதவி செய்கிறது. மேலும் செரிமான கோளாறுகளையும் சரி செய்கிறது.

மேலும் தர்பூசணி விதைகளில் உள்ள ஒரு வகையான அமினோ ஆசிட் என்பவை முடி வளர பெரிதும் உதவுகின்றது. மேலும் அதிலுள்ள மற்றொரு காரணம் அது முடி அடர்த்தியாகவும் பளபளவென்று அழகாகவும் வளர பூசணிக்காய் விதைகள் காரணமாக அமைகிறது. பூசணிக்காய் விதையை எண்ணெய்யாகத் தயாரித்து சில இடங்களில் விற்பனை செய்கிறார்கள் அதை நமது முடியில் தேய்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பூசணிக்காய் விதைகளைப் பல வழிகளில் சாப்பிடலாம் பச்சையாகவும் சாப்பிடலாம் அல்லது வறுத்துச் சாப்பிடலாம் அல்லது நாம் செய்யும் சில உணவுப் பொருட்களிலும் கலந்தும் சாப்பிடலாம் ஆனால் தினமும் நமது உணவுப் பட்டியலில் பூசணிக்காய் விதை இருந்தால் மேலே உள்ள விஷயங்கள் நமக்குச் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பது உறுதி.

Trending News

Latest News

You May Like