உங்களுக்கு இருமல், ஜலதோஷமா..? கைக் கொடுக்குது இருக்கிறது கற்பூரவல்லி....!

கிராமங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மார்புச்சளி, இருமல் மற்றும் காய்ச்சல் வரும்போது கற்பூரவல்லி பயன்படுத்துவர்
- கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து.
- நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கும் ஆஸ்துமாவுக்கும் இயற்கையான சிகிச்சைப் பொருளாக பயன்படுகிறது.
- இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்குகலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
- இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.
- வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
- நாசி அடைப்பு மற்றும் தொண்டை புண் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் கற்பூரவல்லி சாறு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம்.
- கற்பூரவல்லியில் சோடியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, கால்சியம்,வைட்டமின் சி, இரும்புச்சத்து, வைட்டமின் பி6, மெக்னீசியம் ஆகிய சத்துகள் இருக்கின்றன.
- உடலின் சளி நீங்க இலைகளை அரைத்து நீர்கலந்து கொதிக்க வைத்து ஏலக்காய், கிராம்பு (சிறிதளவு) மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து 3 நாட்களுக்கு தினசரி 2 வேளை பருகி வரவும்.
- விஷக் கிருமிகளை முறிக்கும் தன்மை கொண்டதாலேயே முன்னோர்கள் வீட்டில் முன் துளசி, கற்பூரவல்லி செடியை வளர்ப்பதுண்டு.
மூட்டுவலிக்கு கற்பூரவல்லி
மூட்டுவலிக்கு கற்பூரவல்லி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் மூட்டுவலி படிப்படியாக குறையும்.வயதானவர்கள் ஒரு வாரம் இதை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் சம்பந்தமான நோய்கள் சரியாகும்
பூச்சிகள் வெளியேற
வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேற கற்பூரவல்லி இலைச்சாறை குழந்தைகளுக்கு மாலை அல்லது அதிகாலை வேளையில் ஒரு டீஸ்பூன் அளவு கொடுத்துவந்தால் பூச்சிகள் வெளியேறும். குழந்தைகள் குடிக்க மறுத்தால் தேன் கலந்து கொடுக்கலாம். இந்த சாற்றை குடித்த அரை மணி நேரம் வரை வேறு எதையும் சாப்பிடக்கொடுக்க கூடாது.
நீரிழிவு நோயாளிகள்
நீரிழிவு நோயாளிகள் எடுத்துகொள்ள வேண்டிய மூலிகையில் கற்பூரவல்லி பயனுள்ளதாக இருக்கும். இது உயர் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதை தவிர்க்கிறது. மேலும் நீரிழிவு நோயாளிகள் கால் புண்கள் ஆறுவதற்கு உதவுகிறது. இது காயங்களை குணப்படுத்தவும் செய்கிறது.
வாய்வு பிரச்சனைக்கு
வாய்வு பிரச்சனை இருந்தால் கற்பூரவல்லி இலைச்சாற்றுடன் கலந்து தேனில் கலந்து சூடாக்கவும். இந்த கலவையை இறக்கி ஆறவைத்து இரண்டு முறை குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.கற்பூரவல்லி கை- கால் வலிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரியமாகவே வழங்கப்படுகிறது. தேள் கடித்தவுடன் அவசர நிலைக்கு கற்பூரவல்லி சாற்றை மேற்பூச்சாக பயன்படுத்தலாம்.
தாய்ப்பாலூட்டும் பெண்கள் கற்பூரவல்லி இலைச்சாற்றை குடித்தால் குழந்தைக்கு அதன் நன்மைகள் கிடைக்கும்.