உங்கள் வீட்டில் குழந்தை இருக்கா? அப்போ, இந்த எண்ணையும் கண்டிப்பாக இருக்கனும்....

பச்சிளம் குழந்தைகள் இருக்கும் வீட்டில் கண்டிப்பாக விளக்கெண்ணை இருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் குறிப்பிடுவார்கள், ஏன் தெரியுமா..குழந்தை காரணம் இன்றி அழுதால் சிறுது விளக்கெண்ணையை குழந்தையின் வயிற்று பகுதியில் பூசிவிட்டாலே போதும் சட்டென குழந்தை அழுவதை நிறுத்திவிடும்...

உங்கள் வீட்டில் குழந்தை இருக்கா?  அப்போ, இந்த எண்ணையும் கண்டிப்பாக இருக்கனும்....
X

'நீ சரியான விளக்கெண்ணெய்' என்று சொன்னாலே நம்மில் பலருக்கு சுர்ரென்று கோபம் வந்துவிடும் , விளக்கெண்ணெயின் பயன்கள் தெரிந்தால் இனிமேல் நாம் கோபபடவே மாட்டோம்..

ஆமணக்கு பெருஞ்செடிகளாகவோ அல்லது குறுமரங்களாகவோ வளரும் இயல்புடையது. கை வடிவமான பெரிய மடல் போன்ற இலைகளை கொண்ட, சாம்பல் நிறமான பூச்சுடைய, 10 அடி வரை உயரமாக வளரக்கூடிய தாவரம்.

பழங்கால இலக்கியங்களில், இத்தாவரத்தின் அமைப்பைக் குறிக்கும் வகையில் சித்ரபீஜ (அழகான விதைகள்), பஞ்சாங்குல (உள்ளங்கை போன்ற இலைகள்), வாதாரி (வாதத்திற்கு எதிரி) ஆகிய பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இதன் கொட்டை மற்றும் அதிலிருந்து பெறப்படும் எண்ணெய்க்காக (முத்துக்கொட்டை எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், விளக்கெண்ணெய்) வயல்வெளிகளின் ஓரங்களிலும் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலும் வளர்க்கப்படுகின்றது.

உங்கள் வீட்டில் குழந்தை இருக்கா?  அப்போ, இந்த எண்ணையும் கண்டிப்பாக இருக்கனும்....

விளக்கு எரிப்பதற்காகவே ஆமணக்கு எண்ணெய் பழங்காலத்தில் பெருமளவில் பயன்பட்டதால் விளக்கெண்ணெய் என்கிற பெயர் பிரபலமானது. இதன் இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை சிறந்த மருத்துவப் பயன் கொண்டவை.

பச்சிளம் குழந்தைகள் இருக்கும் வீட்டில் கண்டிப்பாக விளக்கெண்ணை இருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் குறிப்பிடுவார்கள், ஏன் தெரியுமா..குழந்தை காரணம் இன்றி அழுதால் சிறிது விளக்கெண்ணையை குழந்தையின் வயிற்று பகுதியில் பூசிவிட்டாலே போதும் சட்டென குழந்தை அழுவதை நிறுத்திவிடும்....

உங்கள் வீட்டில் குழந்தை இருக்கா?  அப்போ, இந்த எண்ணையும் கண்டிப்பாக இருக்கனும்....

குழந்தைக்கு சூடி பிடித்து விடாமல் இருக்க உச்சந்தலையில் தினமும் விளக்கெண்ணையை தடவுவதும் உண்டு..

மலம் கழிக்க முடியாமல் அவஸ்தைப்படும் குழந்தைகளுக்கு இரு சொட்டு விளக்கெண்ணையை நாக்கில் தொட்டு வைப்பதன் மூலம் வயிற்றுக்கட்டு குணமாகிவிடும்..

தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க பசுமையான ஆமணக்கு இலையை நெய் தடவி, அனலில் இலேசாக வதக்கி, இளஞ்சூடான நிலையில் மார்பில் வைத்துக் கட்டலாம். அல்லது ஆமணக்கு இலையைச் சிறு துண்டுகளாக அரிந்து, தேவையான அளவு துவரம் பருப்பு சேர்த்து கீரையாகச் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் போதுமான அளவு சுரக்கும்.

ஆமணக்கு இலையுடன் சம அளவு கீழாநெல்லி இலையைச் சேர்த்து வெண்ணெய் போல அரைத்து எலுமிச்சம்பழம் அளவிற்கு காலையில் மட்டும் உள்ளுக்குள் கொடுக்க வேண்டும். 3 நாட்கள் இவ்வாறு செய்ய மஞ்சள் காமாலை குணமாகும். இந்த நாட்களில் உணவில் புளி, உப்பு நீக்கிப் பத்தியம் கடைபிடிக்க வேண்டும்.

உங்கள் வீட்டில் குழந்தை இருக்கா?  அப்போ, இந்த எண்ணையும் கண்டிப்பாக இருக்கனும்....

3 தேக்கரண்டி விளக்கெண்ணெயுடன் சிறிதளவு இஞ்சிச்சாறு கலந்து உள்ளுக்குள் கொடுக்க மலச்சிக்கல் தீரும். பேதியாகும் வாய்ப்பும் உண்டு. அவ்வாறு ஏற்பட்டால் 2 டம்ளர் மோர் குடிக்கலாம்.

குளிர் காலத்தில் காலில் ஏற்படும் வெடிப்புக்கு விளக்கெண்ணெயை சூடாக்கி, அதில் மஞ்சள் பொடி சேர்த்து, அந்த விழுதை வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி வர சில நாட்களில் சரியாகும்.

உடல் வெப்பத்தினால் கண்கள் சிவந்திருந்தால், சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட குணம் கிடைக்கும்.

விரலி மஞ்சளை விளக்கெண்ணெயில் நனைத்து நல்ல விளக்கின் தீபத்தில் காட்டி அதை சுடும்போது அதிலிருந்து வரும் புகையை நுகர்ந்தால், தலைவலி, சளி முதலியன குணமாகும்.

newstm.in

Next Story
Share it