1. Home
  2. ஆரோக்கியம்

சர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..

சர்க்கரை வியாதியா.. கட்டுக்குள் வைக்க இதை செய்யுங்கள்..

உலகத்தில் இருக்கும் மக்களில் அதிகப்படியாக தாக்கியிருக்கும் நோய்களில் சர்க்கரையும் ஒன்று. தீராத வியாதியாய் வாழ்நாள் முழுக்க இருக்கும் இந்த வியாதியை கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் உடல் உள்ளுறுப்புகளை பதம் பார்த்துவிடும். அதனால் எப்போதும் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும். இதை கட்டுப்பாட்டில் வைக்க உணவு முறை, உடற்பயிற்சி, வாழ்வியல் முறை என்று இருந்தாலும் கூட இதில் உணவு முறை அதிக பங்கு வகிக்கிறது.

நாம் உண்ணும், உணவு குளுக்கோஸாக மாற்றப்பட்டு இரத்தத்தில் கலக்கப்படுகிறது. இந்த குளுக்கோஸின் அளவில் ஏற்றம் இறக்கம் உண்டாகும் போது பாதிப்பு உண்டாகிறது. அதே நேரம் அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டும் கோதுமை உணவை அதிகரிக்க வேண்டும் என்று சொல்வதை கண்டு என்ன சாப்பிடுவது என்று குழப்பமடைவதுண்டு.

கோதுமை உணவு மட்டும் சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை வியாதி வராதா என்ன? ஆனால் அரிசி உணவு எளிதில் செரிமானம் ஆகும். கோதுமையில் தயாரித்த உணவுகள் மெதுவாக கரைந்து இரத்தத்தில் கலக்கும்.இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. ஆனால் அரிசி உணவையும் கூட்டு கலவையாக காய்களுடன் சேர்ந்து சாப்பிடும் போது அவை இரத்தத்தில் மெதுவாக கலக்கும்.

அரிசி உணவு இட்லி,. தோசை, சாதம் என்று எதுவாக இருந்தாலும் அதனுடன் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் சேர்த்து சாப்பிடும் போது அவற்றில் இருந்து பிரித்தெடுக்கப்படும் குளுக்கோஸானது மெதுவாக இரத்தத்தில் கலக்கும். அதே நேரம் அளவுக்கதிகமாக சாப்பிடுவதும் தவறானது. 8 இட்லி சாப்பிடுபவர்கள் ஒரே நேரத்தில் சாப்பிடாமல் பிரித்து 4 இட்லியாக காய்கறிகள் நிறைந்த சாம்பாருடன் சேர்த்து சாப்பிடுவதில் தவறில்லை. உணவுக்கு பச்சரிசி பயன்படுத்தாமல் கைகுத்தல் அரிசி, பாரம்பரியமான அரிசி ரகங்களை பயன்படுத்தினால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடாக இருக்கும். ஆனால் கைகுத்தல் அரிசி இல்லையென்றால் புழுங்கல் அரிசி சாப்பிடுவது நல்லது.

இடையில் பசி எடுத்தால் சுண்டல் வகைகளை எடுத்துகொள்ளலாம். பழங்களிலும் ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, அன்னாசி, பப்பாளி பழங்களை சேர்த்துகொள்ளலாம். அதிக இனிப்பு நிறைந்த மாம்பழம், பலாப்பழம், சீதாப்பழம், சப்போட்டா, திராட்சை, பேரீச்சம் பழம் ஆகியவற்றை சாப்பிடகூடாது. இது குறித்து இன்னும் தெளிவாக பார்க்கலாம். ஆனால் அன்றாட உணவில் இப்படி கலந்து சாப்பிட்டாலே கட்டுக்குள் வைக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

newstm.in

Trending News

Latest News

You May Like