1. Home
  2. ஆரோக்கியம்

தண்ணியடிப்பவர்களுக்கு அதிகாலையில் கை கால் உதறுகிறதா? சரி செய்யலாம்..




முன்பெல்லாம் சிலர் மட்டுமே குடிகாரர்களாக இருந்து வந்துள்ளார்கள். ஆனால் இப்போது கிட்டத்தட்ட அனைவருமே குடிகாரர்களாக இருக்கிறார்கள். சமூக அந்தஸ்திற்காக குடிக்கறேன் என்று சொல்லி ஆரம்பித்து, பின் அந்த பழக்கத்திற்கு அடிமையாகி, அதில் இருந்தே வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்.

குடிப்பழக்கம் ஆரம்பத்தில், மகிழ்ச்சியை அளிப்பது போலத்தான் இருக்கிறது. ஆனால் நாளடைவில் அது, குடிப்பவர்களின் உடலில் உள்ள உள் உறுப்புக்களை கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படையச் செய்து உயிரைப் பறிக்கும் சூழ்நிலைக்கு கொண்டு செல்கிறது.

தற்போதைய வாழ்க்கை முறையில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்கே உடல்நிலை கோளாறு ஏற்பட்டு அவதிப்பட்டு வரும் நிலையில் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கோ ஆரம்பத்தில் நன்றாக இருப்பது போல தோன்றினாலும் நாளடைவில் கல்லீரல், சிறுநீரகம், கணையம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிப்படையும். தொடர்ந்து குடிப்பவர்களுக்கு அதிகாலையில் நடுக்கம், படபடப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

அந்த சமயத்திலும் அவர்கள் தொடர்ந்து குடிப் பழக்கத்தை கடைத்பிடித்தால் அவர்களுக்கு மரணம் நிச்சயம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆகவே குடிப் பழக்கத்தை நிறுத்தச் சொல்கிறார்கள். நிறுத்திய பின், சேதமடைந்த உறுப்புகளை பாதுகாக்க, காலையில் இளநீர், மதிய உணவில் மணத்தக்காளி கீரை, கொய்யாப்பழம், பப்பாளி பழம் போன்றவற்றை உட்கொண்டு குடியினால் பாதிப்படைந்த குடலை தேற்றி நலமுடன் வாழ முயற்சி செய்யுங்கள்.

குடிப் பழக்கத்தை ஆரம்பத்திலேயே விட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் குடி மனிதனை அடிமையாக்கி மனிதனின் உயிரை குடிக்கும். அதனால் தான், குடி குடியைக் கெடுக்கும் என்று சொன்னார்கள். குடியினால் பல வீடுகள் பொருளாதார நிலையில் வீழ்ந்து, குடும்பத் தலைவனை இழந்து தவிக்கின்றன. இது போன்ற பாதிப்புகள் வராமல் இருக்க குடியை மறப்போம். குதூகலமாய் வாழ்வோம்.

newstm.in

Trending News

Latest News

You May Like