இது தெரியுமா? சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு ஆட்டின் இந்த பகுதி அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்..!

சுவரோட்டி என்றால் “சுவரில் ஒட்டிக்கொள்” என்று பொருள்.
பச்சையாக இருக்கும் போது ஒட்டும் தன்மை இருப்பதால் சுவரோட்டி என்று அழைக்கப்படுகிறது. சுவரொட்டிகளில் அமினோ அமிலங்கள், பி12 மற்றும் தாதுக்கள் மிக அதிகமாக உள்ளன.
குறைந்த ஹீமோகுளோபினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது இரும்புச்சத்துக்காக பரிந்துரைக்கப்படுகிறது. மண்ணீரலில் வெறும் 50 கிராம் நமது தினசரி இரும்புச்சத்து தேவையில் 100% பூர்த்தி செய்கிறது. இது தமிழ்நாடு மட்டும் இல்லாமல் தென்னிந்தியாவிலும் மிகவும் பிரபலமாக உணவாக இருக்கிறது.
சுவரொட்டி / மண்ணீரல் / ஆட்டு மண்ணீரல் இரும்புச் சத்துக்கு சமம். இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் (சிவப்பு இரத்த அணுக்கள்) அளவும் மிகவும் அதிகரிக்கிறது மேலும் இரத்த சோகை வராமல் தடுக்கிறது.
ஆட்டு மண்ணீரலில் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சி இரண்டும் அதிகமாக இருப்பதால் அதில் உள்ள இரும்புச்சத்து உடலுக்கு நன்மை தருகிறது.
ஆட்டுமண்ணீரல் சாப்பிடுவதால் இரத்த சிவப்பணுக்களை அதிகமாக்குகிறது.
ஆட்டு ஈரலை போலவே ஆட்டு மண்ணீரலும் அதிகபடியான புரதசத்து நிறைந்து உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்த சோகை வராமல் தடுக்கிறது. விட்டமின் C கூட அதிக அளவு ஆட்டு மண்ணீரலில் உள்ளது.
ஆட்டு மண்ணீரல் நன்மைகளில் மிக முக்கியமானது நோய் எதிர்ப்பு சக்தி!
ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு தீங்கு விளைவிக்கும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். ஆட்டு மண்ணீரல் சாப்பிட்டால் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும். அதன்மூலம் பல நோய்கள் வரமால் நம் உடலை காக்கும்.
சிலர் நீண்ட நாட்களாக தீராத நோயினால் பாதிக்கப்பட்டு, அதைக் குணப்படுத்த அதிக அளவில் மருந்துகள் சாப்பிடுவர். அவர்களை வலுப்பெறச் செய்யக் கூடியது இந்த ஆட்டு மண்ணீரல் என்கின்ற சுவரொட்டி.
பெருங்குடல் அழற்சிக்கு ஆட்டு மண்ணீரல் மிக சிறந்த மருந்தாகும்! மண்ணீரல் சாப்பிடுவதால் பெருங்குடல் அழற்சி வராமல் தடுக்க படுகிறது. பெருங்குடல் அழற்சி உள்ளவர்கள் மண்ணீரலை மாதம் இரு முறை சாப்பிடலாம்.
முடக்கு வாதம் உள்ளவர்களுக்கு சுவரொட்டி மிக பயனுள்ள சிறந்த உணவாகும். சுவரொட்டியில் உள்ள சத்துக்கள் முடக்கு வாதத்தை சீராக்குகிறது இவர்கள் வாரம் ஒரு முறை அவசியம் சாப்பிட வேண்டும்.
சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு ஆட்டு மண்ணீரல் ஒரு வரப்பிரசாதம் ஆகும். மண்ணீரல் சாப்பிடுவதால் சிறுநீரக தொற்றுகள் தீர்க்கப்படுகிறது சிறுநீரக நோயால் பாதிக்க பட்டவர்கள் மாதம் இருமுறை இதை சாப்பிட்டு வரலாம்.