பாதாமை இப்படி தான் சாப்பிட வேண்டும் தெரியுமா ?

பாதாமை இப்படி தான் சாப்பிட வேண்டும் தெரியுமா ?

பாதாமை இப்படி தான் சாப்பிட வேண்டும் தெரியுமா ?
X

பாதாமில் அபரிமிதமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் நல்ல கொழுப்புக்களும் அதிகம். பொதுவாக உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் இருப்பவர்கள் நல்ல கொழுப்புக்களை உணவில் அதிகம் சேர்க்க கெட்டக் கொழுப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கும். அந்த வகையில் பாதாமில் நல்ல கொழுப்புக்கள் நிறைந்திருந்தாலும் அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடும் போது தான் முழுமையான பயன் கிடைக்கும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.இதன் முழுமையான பலன் கிடைக்க முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து, காலையில் பாதாமின் தோலை நீக்கிவிட்டுவிட்டுச் சாப்பிட வேண்டும்.

பாதாமின் தோல் மிகவும் கடினமானது. அதை நம்முடைய உடல் செரிமானம் செய்ய நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும் அதனால் தான் . தோலை அகற்றிவிட்டு சாப்பிடுவது மிகவும் சிறப்பான பலன்களை கொடுக்கும்.பாதாமை தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் அதில் உள்ள நீரில் கரையக் கூடிய நார்ச்சத்து தூண்டப்படுகிறது. இதனால், ஒரு நாளைக்கு 4 அல்லது 5 சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போன்ற உணர்வு கிடைக்கும். செரிமான மண்டலத்தின் செயல்திறன் மேம்படும்.பாதாமின் தோலில் சில வகையான ரசாயனமும் படிந்திருக்கும். அது துத்தநாகம், இரும்பு, மக்னீசியம் உள்ளிட்ட தாது உப்புக்கள் கிரகிக்கப்படுவதைத் தடுக்கிறது.

பாதாமை தண்ணீரில் ஊறவைத்து தோல் நீக்கி சாப்பிடும்போது மெல்வது எளிதாகிறது. இளைஞர்களுக்கு இது பெரிய பிரச்னை இல்லை என்றாலும் சிறுவர்கள், முதியவர்களுக்கு இந்த முறையே சிறந்தது.அரைகுறையாக இல்லாமல் நிதானமாக கடித்துச் சாப்பிடும்போது பாதாம் செரிமானம் ஆகும்

பாதாமை துண்டுகளாக நறுக்கி ஊற வைப்பதும் தவறு. இப்படி செய்வதால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிதைந்துவிடும் அபாயம் உள்ளது. அதனால் ஒரு இரவு முழுவதும் பாதாமை ஊறவைத்து சாப்பிடுவதே சிறந்தது.

Next Story
Share it