1. Home
  2. ஆரோக்கியம்

சர்க்கரை நோயாளிகள்... அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் அன்னாசிப்பழம் சாப்பிடலாமா ?

1

அன்னாசிப்பழத்தில் வைட்டமின் ‘சி’ சத்து நிறைய இருப்பதால் இதனைச் சாப்பிடுவதால், நீரிழிவால் ஏற்படும் இருதய பாதிப்பு, ஆஸ்துமாவினால் ஏற்படும் மூச்சுத் திணறல், ஆசனவாயில் ஏற்படக்கூடிய புற்றுநோய் ஆகியவை நிகழாமல் இருக்கும்.

அன்னாசிப்பழம் உடல் சூட்டினை அதிகரிக்கக்கூடியது. அதனால் இதனை அளவாகச் சாப்பிடலாம். தயிருடன் சேர்த்துச் சாப்பிடலாம். பழரசமாக, நீர் சேர்த்துச் சாப்பிடலாம். மற்ற காய்கறி சாலட்களுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து 40 நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும்.

பித்தத்தால் ஏற்படும் வாந்தி, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும். அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது.

உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது. இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவது இனிப்பு வகையான தின்பண்டங்கள், சாக்லேட், அதனால் வயிற்று வலி, கீரைப்பூச்சி போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகள் அடிக்கடி ஏற்படும். இதனை சரிசெய்ய, அன்னாசிப்பழ இலையை மைய அரைத்து, ஒரு ஸ்பூன் அளவு அதன் சாறுடன் தேன் கலந்து குடுத்தால், வயிற்று போக்கு ஏற்பட்டு, வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறிவிடும்.

அசைவ உணவு உட்கொண்ட பிறகு, 1/2 மணி நேரம் கழித்து சிறிதளவு அன்னாசிப்பழம் சாப்பிட்டால், இறைச்சியில் உள்ள புரதசத்து முழுவதும் உறிய செய்து, நன்கு செரிமானம் ஆக உதவும். அன்னாசிப்பழ சாறுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து ஜூஸ் அருந்தினால், இரும்பு சத்து அதிகரித்து ரத்த சோகை நீங்கும். கருபப்பையில் உள்ள நச்சுக்கள், கழிவுகள், மற்றும் சீரற்ற மாதவிடாய் போன்ற பிரச்சனைகளும் சரிசெய்து, கருபப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலில் ஏற்படக்கூடிய உடல் அசதி, சோர்வு, உட்புறக்காயம், மற்றும் வெளிப்புற காயம், விரைவில் குணமாகும் ஆற்றல் இப்பழத்திற்கு உண்டு.

நன்கு பழுத்த பழத்தை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி, வெயிலில் உலர்த்தி, வற்றல் பதத்திற்கு காயவைக்க வேண்டும். தினமும் இரவு படுப்பதற்கு முன் ஒரு டம்ளர் பாலில் 3-5 துண்டு அன்னாசிப்பழ வற்றலை 1/2 மணி நேரம் உறவைக்கவேண்டும். ஊறவைத்த அன்னாசிப்பழ வற்றலை தொடர்ந்து 40 நாட்கள் வரை சாப்பிட்டுவந்தால் பித்த கோளாறுகள் நீங்கும். அன்னாசிப்பழ வற்றலை பாலில் ஊறவைத்து, வாரத்தில் 2 முறையாவது குடித்துவந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைநோய் குணமாகும்.

உடல் எடை, தொப்பை குறைக்க முயற்சிப்போர், அன்னாசிப்பழம், ஒரு ஸ்பூன் அளவு ஓமம் தண்ணீரில் கலந்து, நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி, குடித்துவந்தால், விரைவில் தொப்பை குறைத்துவிடும். நல்ல குரல் வளம் விரும்புவோர் தேநீர், காபி பதிலாக, அன்னாசிப்பழ சாற்றில் தேன் கலந்து குடித்து வந்தால், கரகரப்பு நீங்கி, குரல் இனிமையாக மாறும். தொண்டை அழற்சி சரியாக, அன்னாசிப் பழசாறு கொண்டு கொப்பளித்தால், விரைவில் அழற்சி குணமாகும்.

தவிர்க்க வேண்டியவர்கள்: சர்க்கரை நோயாளிகள், அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் இப்பழத்தை தவிர்ப்பது நல்லது, மேலும் கர்பிணி பெண்கள் கருவுற்ற ஆரம்ப காலத்தில் சாப்பிடுவதை தவிர்த்து, 8 மாதத்திற்கு மேல் சாப்பிட்டுவந்தால், சுகப்பிரசவம் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

Trending News

Latest News

You May Like