1. Home
  2. ஆரோக்கியம்

வெள்ளரிக்காய் தோல் உரிக்காமல் சாப்பிட வேண்டும்..! ஏன் தெரியுமா ?

1

பெரும்பாலானோர் வெள்ளரிக்காயை தோலுரித்த பிறகே சாப்பிடுவார்கள். ஆனால் வெள்ளரிக்காயை தோலுரிக்காமல் சாப்பிட்டால் தான், அதிக பலன்கள் கிடைக்கும். ஏனெனில் வைட்டமின் ஏ அதாவது பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் கே வெள்ளரித் தோலில் உள்ளது. 

வெள்ளரி சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல வித நன்மைகள் தரக் கூடும். வெள்ளரிக்காயில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல கூறுகள் உள்ளனர். ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பல தீமைகள் ஏற்படுத்தக் கூடும். எனவே இதை மிக அதிகமாக உட்கொள்ளாமல் சரியான அளவில் உட்கொள்ள வேண்டும். வெள்ளரிக்காய் வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் சக்தி நிலையம் என்று அழைக்கப்படுகிறது. 

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வெள்ளரிக்காய் சாப்பிடலாம். வெள்ளரிக்காயில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகிறது. இதன் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த முடியும்.

வெள்ளரிக்காய் சாற்றை முகத்தில் தேய்த்து ஐந்து நிமிடம் ஊறவைத்து பின்பு முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

வெள்ளரிக்காய் சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது. வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மீது வைக்கும்போது கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தையும் இது தளர்த்துகிறது.

மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வெள்ளரிக்காயை தோல் நீக்காமல் சாப்பிட வேண்டும். வெள்ளரிக்காய் தோலில் கரையாத நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. குடல் இயக்கத்தை மேம்படுத்தவும், வயிற்றை சுத்தம் செய்யவும் உதவுகிறது.

வெள்ளரிகள் வயிற்றுக் குளிரூட்டியாக செயல்படுவதன் மூலம் செரிமானத்தை ஆதரிக்கின்றன மற்றும் மெதுவான செரிமானம் மற்றும் வழக்கமான குடல் இயக்கங்களுக்கு கரையக்கூடிய நார்ச்சத்தை வழங்குகிறது. அவற்றின் அதிக நீர் உள்ளடக்கம் மலத்தை மென்மையாக்குகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.

வெள்ளரிகளில் சிலிக்கா உள்ளது, முடி மற்றும் நகங்களை வலுப்படுத்தி, உடையக்கூடிய தன்மையைத் தடுக்கிறது.

பருக்கள், கரும்புள்ளிகள் வறண்ட முகம் போன்றவை மாற மதிய உணவில் வெள்ளரிக்காய் பச்சடியை பாசிப்பருப்பு சேர்த்து சாப்பிட வேண்டும். இத்துடன் தினமும் வெள்ளரிக்காய் அரைத்து முகத்தில் பூச வேண்டும் . பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவலாம். தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காயை உரிக்காமல் சாப்பிட்டால், அதன் கலோரிகள் மேலும் குறையும். மேலும் வெள்ளரிக்காய் தோலில் உள்ள நார்ச்சத்து காரணமாக நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். இது பசியைக் குறைத்து, உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.

நம் எல்லோருக்கும் வெள்ளரிக்காயின் தோலை உரிக்காமல் சாப்பிடும் போது இந்த ஊட்டச்சத்து முழுவதுமே நமக்கு கிடைக்கிறது. ஒருவேளை அதன் தோலை முழுவதுமாக உரித்துவிடும் பட்சத்தில் அதில் நிறைந்துள்ள சத்துக்கள் முழுவதுமாக நமக்கு கிடைப்பதில்லை.அதே சமயத்தில் தோலுடன் வெள்ளரிக்காய் சாப்பிடும் போது அதனை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னரே உட்கொள்ள வேண்டும். ஏனெனில் தற்போது கடைகளில் கிடைக்கும் வெள்ளரிக்காயை பதப்படுத்துவதற்காக அதன் மீது மெழுகு பூசப்படுகிறது. இதன் காரணமாகத்தான் வெள்ளரிக்காய் சாப்பிடுவதற்கு முன் நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னரே உட்கொள்ள வேண்டும். சுடுநீரில் வெள்ளரிக்காயை கழுவுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மெழுகில் இருந்து நமக்கு பாதுகாப்பு அளிக்கும்.

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் சருமம் பளபளக்கும், வெள்ளரிக்காய் தோலில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் முதுமையை தடுக்கிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

வெள்ளரிக்காயை நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் புதினா சேர்த்துக் கொள்ள வேண்டும் அதை வெள்ளரிக்காயுடன் ஒரு முட்டையின் வெள்ளை கருவையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதனை முகத்தில் தடவ வேண்டும் கண்களைச் சுற்றி தடவக் கூடாது ஏனெனில் இதனால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் இப்படி முகத்திற்கு மாஸ்க் போட்ட பின்னர் கண்களின் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்து இருபத்தைந்து நிமிடம் நன்கு உலர வைத்து பின்பு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் இந்த மாஸ்க் சரும ஈரப்பதத்தை பாதுகாக்கும்.

வெள்ளரிக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பிறகு இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவிவிட வேண்டும் இவ்வாறு செய்தால் முகத்தில் தோன்றும் கரும்புள்ளியை நீக்கிவிடலாம்..

கர்ப்ப காலத்தில், வெள்ளரிகள் கருவின் வளர்ச்சிக்கு உதவுகின்றன, நீர்ப்போக்குதலைத் தடுக்கின்றன, மேலும் வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பொதுவான அசௌகரியங்களைக் குறைகின்றன.

வெள்ளரிகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நச்சுத்தன்மையை நீக்கி வீக்கத்தைக் குறைத்து கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

வெள்ளரிக்காய் தோலில் வைட்டமின் ஏ உள்ளது,. எனவே இது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உங்களுக்கு பீட்டா கரோட்டின் கிடைக்க வேண்டும் என்றால், வெள்ளரிக்காயை தோல் நீக்காமல் சாப்பிடுங்கள். ரத்தத்தை உறைய வைக்க உதவும் வைட்டமின் கே வெள்ளரித் தோலில் உள்ளது.

Trending News

Latest News

You May Like