நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..!

பண்டிகைக்காலங்களில் நைவேத்யம் செய்யும் போது இனிப்புக்கு நிச்சயம் பால்பாயசம் செய்வது வழக்கத்தில் உண்டு. அதிலும் குழந்தை கண்ணனை வீட்டிற்கு வரவழைக்கும் போது படையலில் நிச்சயம் பால்பாயசம் உண்டு.

நைவேத்யத்துக்கு உகந்த தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்..!
X

பண்டிகைக்காலங்களில் நைவேத்யம் செய்யும் போது இனிப்புக்கு நிச்சயம் பால்பாயசம் செய்வது வழக்கத்தில் உண்டு. அதிலும் குழந்தை கண்ணனை வீட்டிற்கு வரவழைக்கும் போது படையலில் நிச்சயம் பால்பாயசம் உண்டு. பாலும் சர்க்கரையும் சேமியா ஜவ்வரிசியும் கலந்த பாயசத்தின் சுவை மணப் பது இருக்கட்டும். நமது முன்னோர்கள் காலத்தில் சர்க்கரை இல்லாத காலங்க ளிலும் இறைவனை வழிபடும் போது பாயசம் கண்டிப்பாக இடம்பிடித்தது. இதைவிட ருசியாகவும் மணமாகவும் குறிப்பாக ஆரோக்யமாகவும் கூட இருந் தது. இப்போதும் மூத்தவயதினர் இருக்கும் வீடுகளில் பண்டிகை நாட்களில் இந்த பாயசம் மணக்க மணக்க தயாராகும். எப்படி செய்வது என்று பார்க்க லாமா?

தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயசம்:

தேவை:
பால் நிறைந்த தேங்காய் -1, பாசிப்பருப்பு -2 தம்ளர், பசும்பால்- 1 தம்ளர், பொடியாக நறுக்கிய வெல் லம் – 3 தம்ளர், ஏலத்தூள்- 1 டீஸ்பூன், நெய்- 50 கிராம், உடைத்த முந்திரி, பாதாம், திராட்சை- தேவைக்கு…

செய்முறை:
பாசிப்பருப்பைக் கல் நீக்கி சுத்தம் செய்து அகன்ற பாத்திரத்தில் வேகவைக்க வும். தேங்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கி தேங்காய்ப் பால் பிழிந்து கொள் ளவும். முதல் மற்றும் இரண்டாம் பாலோடு நிறுத்திக்கொள்ளுங்கள். வேக வைத்த பாசிப்பருப்பை நன்றாக மசித்து காய்ச்சிய பால் சேர்த்துகொதிக்கவிட்டு பிழிந்துவைத்த தேங்காய்ப்பாலை சேர்த்து வெல்லத்தைச் சேர்த்து கரையும் வரை அடிபிடிக்காமல் நன்றாக கிளறுங்கள். அவ்வபோது நெய் சேர்ப்பதும் நல்லது. நன்றாக கொதித்ததும் நெய்யில் முந்திரிபருப்பு, பாதாம், திராட்சை வறுத்து சேர்த்து எஞ்சியிருக்கும் நெய்யை விட்டு, ஏலத்தூள் சேர்த்து இறக்குங்கள்.அருமையான பாயசம் தயார்.

பாசிப்பருப்புடன் ஜவ்வரிசி தேவையெனில் அதையும் சேர்க்கலாம். ஆனால் ஜவ்வரிசியைத் தனியே குழைய வேகவைத்து பால் சேர்க்கும் போது சேர்க்க வேண்டும். வெல்லத்தை சிறிது சிறிதாக நறுக்கியும் சேர்க்கலாம். சில நேரங்களில் வெல்லத்தில் மண், கசடு இருக்கும். அதனால் வெல்லத்தை இலேசாக நீர் விட்டு கரையும் பதம் வந்ததும் கசடு, மண் நீக்கி சேர்க்கலாம்.

இப்போது நாட்டுச்சர்க்கரை அதிக பயன்பாட்டுக்கு வந்துவிட்டதால் நாட்டுச்சர்க்கரையும் இனிப்புக்கு சேர்க்கலாம். தேங்காய்ப்பாலை இரண்டுக்கு மேல் பிழிந்தால் பாயசத்தின் சுவை சற்று குறையும். தேங்காய்க்குப் பதிலாக தேங்காய்த் துருவலைச் சேர்ப்பார்கள். ஆனால் அதிக சுவை தருவது தேங்காய்ப்பால் தான். முந்திரி பாதாம் பருப்புகளைத் தவிர சாரப்பருப்பு, பிஸ்தா பருப்பு போன்றவற்றையும் சேர்க்கலாம்.

எப்போதும் பால் பாயசம் என்றில்லாமல் தேங்காய்ப்பால் பாசிப்பருப்பு பாயாசத்தையும் செய்து அசத்துங்கள். வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கும்..

Newstm.in

newstm.in

Next Story
Share it