1. Home
  2. லைப்ஸ்டைல்

சைனஸ் இருந்தா இதை செஞ்சு பாருங்க!

சைனஸ் இருந்தா இதை செஞ்சு பாருங்க!


இன்றைய இளைஞர்கள் உடல் உழைப்பு செய்வதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாததால் பெரும்பாலானோர் ஊளைச் சதை அதிகரித்து மிகக் குறைந்த வயதிலேயே ஒபிசியாக மாறிவிடுகின்றனர்.

இவற்றிற்கு மிக எளிமையான ஒரே தீர்வு நடைப்பயிற்சியே. அதிலும் தினமும் காலை, மாலை 8 வடிவ நடைபயிற்சியை வெட்ட வெளியில் மேற்கொள்வது மிகவும் காலையில் நல்லது.இதனை முறைப்படி செய்து வர பலன்கள் கூடுவதைக் கண்கூடாகக் காணலாம்.

நடக்க ஆரம்பிக்கும் முன்பு முதலில் வடக்கில் இருந்து தெற்காகவும் பின்பு, வடக்கில் இருந்து தெற்காகவும் நடக்க வேண்டும்.ஒவ்வொரு திசையிலும் 15 நிமிடங்கள் என மொத்தமாக 30 நிமிடங்கள் தொடர வேண்டும். 8 வடிவ நடைபயிற்சியின் போது காலில் செருப்பு போடுவதைத் தவிர்ப்பது நலம். அப்படி நடந்தால் பாதத்தின் மையப்பகுதியில் அழுத்தம் நன்றாக ஏற்பட்டு உள்உறுப்புக்கள் நன்கு செயல்பட்டு ஆரோக்கியமாக வாழலாம்.சளி, இருமல், ஆஸ்துமா , மூக்கடைப்பு உள்ளவர்கள் 8 வடிவ நடைபயிற்சியை மேற்கொள்வதால் உடல் விரைவில் சரியாவதைக் காணலாம்.

  • 8 வடிவ நடைபயிற்சி பார்வைக் குறைப்பாட்டை சரிசெய்யும்.
  • கண்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து பார்வைத் திறன் அதிகரிக்கும்.
  • தொடர்ந்து இந்த 8 வடிவ நடைப்பயிற்சியை மேற்கொள்ள தோள்பட்டை வலி, கழுத்து வலி, முதுகு வலி, முழங்கால் வலி, கருப்பை பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம் சரியாகும்.
  • இது தவிர சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், தைராய்டு பிரச்சனை, சிறுநீரக கற்கள், பித்தக்கற்கள், ஆஸ்துமா, சைனஸ், தூக்கமின்மை, இதய நோய்கள், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் என பல பிரச்சனைகளுக்கு மிக எளிமையான தீர்வாக அமையும்.

Trending News

Latest News

You May Like