மணக்க சுவைக்க வீட்டிலேயே செய்யலாம் கேரட் அல்வா

வீட்டிலிருக்கும் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகள் கடைகளுக்கு இணையாக செய்யும் போது சப்புக்கொட்டி சாப்பிடு வார்கள். அதிலும் அல்வாவுக்கு தனி மவுசு உண்டு.

மணக்க சுவைக்க வீட்டிலேயே செய்யலாம் கேரட் அல்வா
X

ஆரோக்யம் குறித்த கட்டுரையில் கொஞ்சம் ருசிக்கும் இடம் கொடுக்கலாம் என்று அவ்வப்போது ரெஸிபி கட்டுரைகளையும் கொடுத்து வருகி றோம். வீட்டிலிருக்கும் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகள் கடைகளுக்கு இணையாக செய்யும் போது சப்புக்கொட்டி சாப்பிடு வார்கள். அதிலும் அல்வாவுக்கு தனி மவுசு உண்டு.

திருநெல்வேலி அல்வாவைத் தாண்டி மைதா அல்வா, பிரட் அல்வா, பாதாம் அல்வா,பீட்ரூட் அல்வா இப்படி விதவிதமான அல்வாக்கள் மத்தி யில் நெய் மணக்க தயாரிக்கப்படும் கேரட் அல்வாவைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.

சுட்டீஸ் முதல் சீனியர்ஸ் வரை அனைவருக்குமே பிடித்த கேரட் அல்வாவை அரைமணியில் தயாரிக்க முடியும். வீட்டில் விசேஷங்கள் வந்தா லும், விருந்தினர்கள் வந்தாலும் உடனடியாக ருசியாக செய்து அசத்த கேரட் அல்வா தான் பெஸ்ட் சாய்ஸ்.

கேரட் அல்வா:

மணக்க சுவைக்க வீட்டிலேயே செய்யலாம் கேரட் அல்வா

தேவையான பொருள்கள்:
ஃப்ரஷ் கேரட் - அரைக்கிலோ,
சர்க்கரை இல்லாத கோவா- 200 கிராம்,
சர்க்கரை- அரைக் கிலோ,
நெய்-150 கிராம் (குறைந்தது 100 கிராம்)
பால்- 1 தம்ளர்,
ஏலத்தூள்- 3 சிட்டிகை
முந்திரி பொடித்தது- 50 கிராம்.
செய்முறை:
கேரட்டைத் தோல் சீவி மெலிதாக சீவிக்கொள்ளவும். ஃப்ரஷ் கேரட்டாக இருந்தால் இனிப்பு கூடும்.
பிரஷர் குக்கரில் கேரட் துருவலைப் போட்டு பால்விட்டு மூன்று விசில் விட்டு இறக்கவும். இப்போது கேரட்டின் பச்சை வாசனை போயிருக்கும்.
அகன்ற பாத்திரத்தில் வேக வைத்த கேரட் துருவலை போட்டு, சர்க்கரை இல்லாத கோவாவைச் சேர்த்து மீண்டும் நன்றாகக் கொதிக்கவிடவும்.
கலவை இறுகிய பதம் வரும்போது சர்க்கரையைச் சேர்த்து கிளறவும்.

மணக்க சுவைக்க வீட்டிலேயே செய்யலாம் கேரட் அல்வா

கைவிடாமல் மிதமானத் தீயில் கிளறி அவ்வப்போது நெய் விட்டு கிளற வும். நன்றாக சுருளவரும் வரை கைவிடாமல் கிண்டி ஏலத்தூள் சேர்த்து அல்வா பதம் வரும் போது நெய்யில் வறுத்த பொடித்த முந்திரியைச் சேர்த்து கிளறி இறக்கவும். தேவையெனில் பிஸ்தா பருப்புகளையும் துண்டு களாக நறுக்கி சேர்க்கவும்.

நெய், கோவா மணக்க மணக்க கேரட் அல்வா இனிப்பாக தயாராகும். மணமும் ருசியும்... மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும். இன்றே செய்து அசத்துங்கள் தோழியரே!

newstm.in

newstm.in

Next Story
Share it