1. Home
  2. ஆரோக்கியம்

வயிற்றில் புழுக்களை அழிக்கும் பாகற்காய்! இதுல இவ்வளவு சத்துக்கள் இருக்கா?

வயிற்றில் புழுக்களை அழிக்கும் பாகற்காய்! இதுல இவ்வளவு சத்துக்கள் இருக்கா?


சாப்பாட்டில் ஆறு விதமான சுவைகளையும் ஆரம்பத்தில் இருந்தே குழந்தைகளும், பெரியவர்களும் பழக வேண்டும்.வாரத்தில் ஒரு நாளாவது கசப்பு அல்லது துவர்ப்பு சுவையை உணவில் சேர்த்துக் கொள்ள நாக்கில் சுவை நரம்புகள் தூண்டப்படும் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

கசப்பு சுவை என்பதற்காக பாகற்காயை ஒதுக்கி விடாமல் சுவையின் ஒரு அங்கம் என்பதை பெரியவர்கள் இயல்பாகவே ஏற்றுக்கொண்டால் அவர்களை பார்த்து பார்த்து வீட்டுக் குழந்தைகளும் எளிதில் ஏற்றுக் கொள்வார்கள். கல்லீரலை சீராக இயங்கச் செய்வதில் பாகற்காய்க்கு பெரும் பங்கு உண்டு. மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் சார்ந்த நோய்களில் இருந்து விடுபட பாகற்காய் மிகச் சிறந்த மருத்துவ உணவு.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. செரிமானப் பிரச்சனைகளை சரி செய்து குடல் ஆரோக்கியத்தை மேம்படச் செய்கிறது. பாகற்காய் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கவும், நரம்புத் தளர்ச்சியில் இருந்து விடுபடவும், மன அழுத்தத்தை சீராக்கவும் பாகற்காய் உதவுகிறது.

கண்பார்வைக் கோளாறுகள் என்றவுடன் மருத்துவர்களும் காரட்டை மட்டுமே பரிந்துரைக்கிறார்கள். ஆனால் கேரட்டில் இருப்பதை விட அதிக சத்துக்கள் பாகற்காயில் இருப்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. குழந்தைகள் வயிற்றில் உருவாகும் குடல் புழுக்களின் தொல்லையால் சரிவர சாப்பிடாமல் இருந்தால் வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிப்பதற்கு மருந்து மாத்திரைகளைத் தேடிச் செல்லாமல், பாகற்காயைப் பயன்படுத்தலாம். வாரம் ஒரு முறை பாகற்காயைச் சாப்பிடக் கொடுத்தாலே குடல் புழுக்களை ஓட்டிவிடும்.

பாகற்காய் இலைகள் , காய் , விதைகள் அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தவை . இவற்றை உலரவைத்து பொடி செய்து ஒரு நாளைக்கு 3கிராம் சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியம் மேம்படுவதை உணரலாம்.

மற்ற காய்கறிகளை போல் அல்லாமல் பாகற்காயை வதக்கிச் சாப்பிட்டாலும், ஆவியில் வேக வைத்து சாப்பிட்டாலும் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். சமைக்கும் போது குறைவான தண்ணீரை பயன்படுத்தி சமைக்கலாம். பாகற்காய் உடன் எலுமிச்சை , இஞ்சி, மிளகு போன்றவற்றை சேர்த்து ஜூஸ் செய்து குடித்தால் கசப்பு தன்மை பெருமளவு குறைந்திருப்பதை காணலாம்.

பாகற்காய் பெயரில் மட்டும் தான் காய். மற்றபடி இது பழ வகையைச் சேர்ந்தது. அதுவும் கசப்பான பழம். இதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைப்பதற்கு அப்படியே ஜூஸாக்கி சாப்பிடுவது தான் நல்லது. கசப்பு சுவை என்பதற்காக பாகற்காயை ஒதுக்கி விடாமல், சிறுவயது முதலே சாப்பிட குழந்தைகளைப் பழக்கி வர வேண்டும். அப்போது தான் கசப்பும் சுவையின் ஒரு அங்கம் என்பதை இயல்பாகவே அவர்கள் புரிந்துக் கொள்வார்கள்.

newstm.in

Trending News

Latest News

You May Like