1. Home
  2. ஆரோக்கியம்

மஞ்ச பூசணிக்காயை சின்ன குழந்தைகளுக்கு தரலாமா ?

1

குழந்தைக்கு ஆறு மாதம் முடிந்ததும் சுவையான, மென்மையான காய்கறிகளை அறிமுகப் படுத்துங்கள். வெள்ளைப் பூசணிக்காயை விட மஞ்சள் பூசணிக்காய் சேர்த்துக் கொள்வது நல்லது.இது கொஞ்சம் இனிப்புச் சுவையுடன் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

கேரட்டில் வைட்டமின் ஏ - பீட்டா கரேட்டீன் நிறைந்திருக்கும் உணவுகளைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.இது குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. கொஞ்சம் இனிப்புச் சுவையுடன் இருக்கும். கேரட்டை குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது கேரட்டை வேகவைத்து மசித்துக் கொடுக்க வேண்டும்.

பசலைக் கீரை மிக மென்மையானது. பசலைக் கீரையை ஒரு வயது குழந்தையின் உணவில் சேர்க்கலாம்.பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் என்பதால் குழந்தகளுக்குக் கொடுப்பதன் மூலம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பட்டாணியில் இரும்புச்சத்தும் அதேசமயம் புரதச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன. அதோடு இதில நார்ச்சத்துக்களும் அதிக அளவில் நிறைந்திருக்கின்றன.ஒவ்வொரு வேளை உணவிலும் 4 கிராம் அளவுக்கு பட்டாணியைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் சேர்க்கக் கூடாது.

குழந்தைகளுக்கு இயல்பாகவே மலச்சிக்கல் பிரச்சினை இருக்கும். அவற்றைத் தவிர்க்க நார்ச்சத்துக்கள் நிறைந்த பொருள்களைக் குழந்தைகளின் உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.இது உடலுக்குப் போதிய ஆற்றலைக் கொடுப்பதோடு நோயெதிர்ப்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்யும். சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, அவகேடோ போன்ற மென்மையான உணவுகளைக் கொடுக்கலாம்.

வேறு என்னவெல்லாம் கொடுக்கலாம்?

  • வாழைப்பழம்,
  • வெண்டைக்காய்,
  • ப்ரக்கோலி,
  • சௌ சென,
  • குடைமிளகாய்,
  • வெள்ளரிக்காய்,
  • தயிர், பாலாடகை்கட்டி,
  • தயிர்

உள்ளிட்ட கால்சியம், பொட்டாசியம், நைட்ரேட் உள்ளிட்ட மினரல்கள் நிறைந்த உணவுகளை அதிகமாகக் கொடுக்கலாம்.


 

Trending News

Latest News

You May Like