1. Home
  2. ஆரோக்கியம்

தினமும் ஈரல் சாப்பிடலாமா? வாரத்திற்கு எத்தனை முறை சாப்பிடலாம்...?

1

பொதுவாக இறைச்சியை விட ஈரலில் கொழுப்பு அதிகம். அதனால் கலோரிகளும் அதிகமாக இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் ஈரலில் கலோரி அளவுகள் குறைவு தான்.

100 கிராம் அளவு சமைத்த ஈரலில் வெறும் 150 கலோரிகள் மட்டும் தான் இருக்கின்றதாம்.

நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதேசமயம் கலோரிகளும் குறைவு தான். அதனால் தினமும் ஈரல் சாப்பிடலாமா என்கிற கேள்வி நமக்கு வரும். ஆனால் ஈரல் தினமும் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏன் தெரியுமா?

இதில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் மிக அதிக அளவில் இருக்கின்றன. அதனால் தினமும் சாப்பிட்டால் வைட்டமின்கள் அளவு உடலில் அளவுக்கு அதிகமாகி அதுவே வைட்டமின் டாக்ஸிட்டியை ஏற்படுத்தும் (vitamin toxicity).

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்திற்கு ஒரு முறை ஈரல் சாப்பிடுவதால் ரத்தம் மளமளவென உடலில் அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.

ரத்த சோகை குறைபாடு நீங்கும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும், ஈரல் ஒரு நல்ல ஒரு உணவாக இருக்கும். ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்யக்கூடிய எல்லா வகையான ஊட்டச்சத்துக்களும் ஈரலில் இவற்றில் இருக்கும். ஈரல் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியையும் அதிகரிக்கும்.

கர்ப்பிணி பெண்கள், ஆட்டு ஈரலைச் சாப்பிட்டுவந்தால் கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். ஈரல் சாப்பிடுவதால் உடல் சோர்வு, குடல் பலமின்மை நீங்கி, உடல் பலம் பெற்று, உடல் சுறுசுறுப்பும், புது தெம்பும் கிடைக்கும்.

வைட்டமின் பி12 ஈரலில் நம்முடைய தினசரி தேவையில் 37 மடங்கு அதிகமாக இருக்கிறதாம்.

வைட்டமின் ஏ தினசரி தேவையை விட 8 மடங்கு அதிகமாக இருக்கிறது.

காப்பர் தினசரி தேவையைக் காட்டிலும் 7 மடங்கு அதிகம்.

செலீனியம் தினசரி தேவையை விட 1.5 மடங்கு அதிகமாக இருக்கிறது.

ஊட்டச்சத்துக்கள் குறிப்பாக வைட்டமின்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் தினமும் சாப்பிடுவதையோ அடிக்கடி சாப்பிடுவதையோ தவிர்த்துவிட்டு வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் ஈரலை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

ஆட்டு ஈரலைச் சாப்பிட்டாலே கருவில் இருக்கும் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கும். அதே நேரம் ஆட்டில் கொலஸ்ட்ரால் அதிகம் என்பதால் இதைச் சாப்பிடும்போது பூண்டையும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.        

கோழி ஈரலை சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கோழி ஈரலில் உள்ள இரும்புச்சத்தானது உடலால் எளிதில் உறிஞ்சக்கூடியது. டயட்டில் இரப்பவாகள் இந்த கோழி ஈரலை தாராளமாக உண்ணலாம்.

இதில் புரோட்டீன் அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு. எனவே உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு கோழி ஈரல் மிகச்சிறந்த உணவு.

100 கிராம் கோழி ஈரலில் 116 கலோரிகள் உள்ளன. இவற்றில் 85 புரோட்டீனில் இருந்து நேரடியாக வருகின்றன. எனவே புரோட்டீன் உணவுகளை அதிகம் எடுக்க நினைப்பவர்கள் கோழி ஈரலையும் தங்களின் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

இதை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் வேறு எவ்விதமான பிரச்சனையும் வராமல் தடுக்கலாம்.

இதில் இருக்கும் வைட்டமின் ஏ பார்வைக்கும், நோயெதிர்ப்பு மண்டலத்திலும், இனப்பெருக்க மண்டலத்திற்கும், வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமான சத்தாகும்.

Trending News

Latest News

You May Like