1. Home
  2. ஆரோக்கியம்

காளானை ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்தி சாப்பிடலாமா ?

1

பொதுவாக பாக்கெட்டில் வாங்கிய காளானை மூன்றுநாட்கள் வரை ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகப்படுத்தலாம். ஃப்ரீசரில் வைக்கக்கூடாது. பாதி அளவுஎடுத்து உபயோகப்படுத்தி விட்டு மறுநாள் மீதியைஉபயோகப்படுத்தலாம். ஆனால் திறந்து வைக்கக்கூடாது. அப்படி செய்தால் காளான் கறுத்துவிடும்.
 
ஒரு இறுக்கமான டப்பாவில் போட்டு மூடிவைத்தால் மூன்று நாள் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். நறுக்கிய பிறகு கூட வைத்திருக்கலாம். சிறிது நிறம் மாறினால் பரவாயில்லை. ஆனால், பிசுபிசுப்பாக மாறினால் உபயோகப்படுத்தக் கூடாது.

எஞ்சிய உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், சிலவகை உணவுகளை சூடுபடுத்தி சாப்பிட்டால் உடலுக்கு பல தீமைகள் ஏற்படும். அவ்வாறு ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் சில உணவுகள் குறித்து பார்ப்போம்.

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
 
காளானில் பியூரின் சத்து இருப்பதால் கீல்வாதம் உள்ளவர்கள் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல, காளானை நன்றாக சமைத்தபிறகே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 
காளான் சத்தான பொருளாக இருந்தாலும் அதனை அனைவரும் சாப்பிட்டு விட முடியாது. சிலருக்கு சரும அலர்ஜி பிரச்சினைகள் இருக்கும், அப்படிப்பட்டவர்கள் காளானை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் அரிப்பு, சருமத்தில் தடிப்புகள் போன்றவை ஏற்படலாம்.

காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதை, இரண்டாம் முறை சூடுபடுத்தும்போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும்.

#முட்டை
சால்மோனெல்லாவைக் கொண்டிருக்கும் முட்டை பொதுவாக மிதமான வெப்பத்திலேயே சமைக்கப்படுகிறது. இதனால் அதிலுள்ள பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்படுவதில்லை.
சமைத்த முட்டையை அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைத்திருக்கும் போது, அதில் உள்ள பாக்டீரியாக்கள் பன்மடங்கு பெருகிவிடும். இந்த நிலையில் உள்ள முட்டையை சாப்பிடுவது பல வயிறு தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும்.

#பீட்ரூட்
பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரிக் ஆக்சைடுகள் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவும். ஆனால் இந்த பீட்ரூட் வெப்பத்தால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஏனெனில் நைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை சமைத்து, பின்னர் சரியாக குளிர வைக்க வேண்டும். அவ்வாறு குளிர்விக்கப்படவில்லை என்றால், சூடுபடுத்தும் போது நைட்ரேட்டுகள், நைட்ரைட்டுகளாக மாறிவிடும். அதன் பின்னர் நைட்ரோசமைனாக மாறிவிடும்.

இவை கார்சினோஜெனிக் பொருட்கள் என்பதால், இந்த உணவு பொருளை சாப்பிடுவது சிலவகை புற்றுநோய்களை உண்டாக்கும்.

#உருளைக்கிழங்கு
அதிகளவு வெப்பத்தில் சமைக்கப்படும் உருளைக்கிழங்கு, அறைவெப்பநிலையில் நீண்ட நேரம் வைக்கப்படும்போது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறு செய்யும்போது க்ளோஸ்டிரீடியம் போட்லினின் வளர்ச்சியை, பௌலலிஸத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை வளர்க்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது உடலில் உள்ள க்ளெசமிக் அமைப்பின் மீது பாதிப்பை உண்டாக்கும்.

#கீரை
பீட்ரூட்டை போலவே கீரையும் நைட்ரேட்டுகளை அதிகளவு கொண்ட பொருளாகும். எனவே கார்சினோஜெனிக்கை கீரையில் உள்ள நைட்ரேட்டுகள் உருவாக்காமல் இருக்க வேண்டும் என்றால், முடிந்தளவு கீரையை பச்சையாக சாப்பிட முயற்சி செய்ய வேண்டும்.

ஏனெனில், நைட்ரேட்டுகள் உள்ளதால் கீரைகள் சேர்க்கப்பட்ட உணவுகளையும் கூட சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது..

#கோழிஇறைச்சி
முட்டையைப் போல் கோழி இறைச்சியிலும் சால்மோனெல்லா, மீதமான பின் சாப்பிடும்போது உடலில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இதற்கு காரணம் இந்த இறைச்சியில் அதிகரிக்கும் பாக்டீரியாக்கள் தான்.

எனவே கோழி இறைச்சியை ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்தும்போது, அதில் உள்ள கெட்ட கொழுப்புகள் மாரடைப்பை கூட உண்டாக்கும்.

#வறுத்தஉணவுகள்
வறுத்த உணவுகள் எப்போதும் ஆரோக்கியமானவை அல்ல. உணவுகள் மீண்டும் வறுக்கப்படும்போது, அதனால் ஏற்படும் புகை உணவின் மீது நச்சுத்தன்மையை உண்டாக்கும். இதனால் ஏற்படும் சேர்மங்கள் வயிற்றில் புற்றுநோயை ஏற்படுத்தும்.

#கடல்உணவுகள்
மீன் அப்போதே சமைக்கப்படுவது மிகவும் ஆரோக்கியமானதாகும். ஆனால் சமைக்கப்பட்ட மீனை மீண்டும் சமைத்து சாப்பிடுவது மிக மோசமானதாகும். ஏனெனில், 40 முதல் 140 டிகிரிக்கு கீழே வைக்கப்பட்டிருக்கும் கடல் உணவுகளில், பாக்டீரியாக்கள் அதிகளவில் பரவும்.
மேலும் எந்த வெப்பநிலையில் இருந்தாலும் மீண்டும் கடல் உணவை சூடுபடுத்தி சாப்பிடுவது என்பது ஒரு போதும் ஆரோக்கியமானதாக இருக்காது. இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படும்.

#சமையல்எண்ணெய்
எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்

#சாப்பாடு
அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, ஃபுட் பாய்சனாக மாறிவிடும்.
 

Trending News

Latest News

You May Like