இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா ?

இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா ?

இரவில் வாழைப்பழம் சாப்பிடலாமா ?
X


"வாழையடி வாழையாக" என அனைவரும் வாழ்த்துவது உண்டு வாழை மரம் அதன் அனைத்து பாகங்களையும் அனைவருக்கும் பயன்படும் படி இயற்கையால் படைக்கப்பட்டு இருக்கும்.செரிமானத்திற்கு உதவும் வாழைப்பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் இரவு சிற்றுண்டி களில் ஒன்று.

இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகை போன்ற உடல் உபாதைகள் எதிர்த்துப் போராடும் வல்லமை கொண்டது.ஆனால் ஆயுர்வேத மருத்துவம் என்ன கூறுகிறது என்றால் இரவு நேரத்தில் நீங்கள் வாழைப்பழம் சாப்பிடுவதால் அது சளித் தொல்லையை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறது.

மேலும் உங்கள் உடலில் உள்ள சோர்வான தசைகளை வலுவாக்க வாழைப் பழத்தில் உள்ள பொட்டாஷியம் உதவுகிறது.எனவே இரவு நேரங்களில் பெரும்பாலும் வாழைப் பழங்களை தவிர்த்து மாலை நேரங்களில் இரண்டு அல்லது ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது இரவு நன்றாக தூங்குவதற்கு வழிவகுக்கும்.

வாழை பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அவர்களின் மனநிலையில் சிறந்த மாற்றங்கள் ஏற்படும் என மருத்துவ ஆராய்ச்சிகள் யாவும் தெரிவிக்கின்றன.ஒரு வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளனவாம் 500 கலோரிகளும் குறைவாக உடலில் சேர்த்துக் கொள்ள விரும்புவோர் ஒரு நாளில் இரண்டு வாழைப்பழங்கள் மற்றும் ஒரு கப் பால் சாப்பிடலாம். வாழையை சாப்பிடுவோம் வாழ்வாங்கு வாழ்வோம்!.

newstm.in

Next Story
Share it