வெளியில் சென்று வந்த உடனே தண்ணீர் குடிக்கலாமா?

வெளியில் சென்று வந்த உடனே தண்ணீர் குடிக்கலாமா?

வெளியில் சென்று வந்த உடனே தண்ணீர் குடிக்கலாமா?
X

பொதுவாக நம் வீட்டு பெரியவர்கள், வெளியில் விளையாடி வீட்டிற்கு வந்தால், வந்த உடனே தண்ணீர் குடிக்க விடமாட்டார்கள். அதே போல அதிகமாக வியர்த்து இருந்தாலும் தண்ணீர் குடிக்க விடமாட்டார்கள். ஏன் என்று சிலருக்கு பலருக்கு தெரியாது ...அதற்கான காரணம் இது தான் !!

பெரியவர்கள் சட்டுனு சளி பிடிக்கும் என்றும் அதனால் தான் வெயிலில் விளையாடி வந்த பின்னர் தண்ணீர் குடிக்கக் கூடாது என்று சொல்வார்கள். வெயிலில் வேலை பார்த்து விட்டு வந்தோ அல்லது விளையாடிவிட்டு வந்தோ தண்ணீர் குடிக்கும் போது நம் உடலில் என்ன மாற்றம் நடக்கும்?

அந்த நேரத்தில் உடல் அதிக வெப்ப நிலையில் இருக்கும். நாம் உடனே தண்ணீர் குடிக்கும் போதோ அல்லது, முகம் கை கால்களை குளிர்ந்த நீரில் கழுவும் போதோ, உடல் தனது வெப்ப நிலையை குறைக்க முயற்சிக்கும். நாம் குளிர்ந்த நீரைக் குடிக்கும்போது உடலில் உள்ள சிறிய இரத்தக் குழாய்கள் வெடிக்க வாய்ப்புள்ளது.

மேலும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிதல், கல்லீரல் மற்றும் பெருங்குடல் பாதிப்பு, புற்று நோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்ச்சரிக்கிறார்கள். உடல் ஏற்கனவே இருக்கும் வெப்பநிலையில் இருந்து இயல்பான வெப்ப நிலைக்கு மாற குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும். அதுவரை நாம் பொறுத்திருக்க வேண்டியது அவசியம்.

எனவே வெளியில்,வெயில் சென்று விட்டு வந்த பின் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின், முகம் கை கால்களை கழுவி விட்டு, அதன் பிறகு, சாதாரண வெப்ப நிலையில் இருக்கும் நீரைப் பருக வேண்டும். அதன் பின்னரே குளிரூட்டப்பட்ட தண்ணீரை அருந்தலாம். தண்ணீர் தேவையான அளவு, தேவைப்படும் போது சரியான நேரத்தில் குடிப்போம். ஆரோக்கியமாக இருப்போம்.

newstm.in

Next Story
Share it