1. Home
  2. ஆரோக்கியம்

கொரோனா பாதித்த தாய், குழந்தைக்கு தாய்ப்பால் தரலாமா..?

கொரோனா பாதித்த தாய், குழந்தைக்கு தாய்ப்பால் தரலாமா..?


கொரோனாவையே வென்ற தாய்மை கொரோனா பாதித்தவர் தன் குழந்தைக்கு தாய்ப் பாலூட்டினால் தொற்று பரவாது என ஆய்வில் தகவல்.

தாய்ப்பால் என்ற அமிர்தமம் ஒரு அருமருந்து. உலகத்தில் எவராலும் விலை கொடுத்து வாங்க முடியாத ஒரு சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்ல ஒரு உணவாகும்.

குழந்தை சிறு வயதிலேயே கொடுக்கும் தாய்ப்பால் அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் உடல் வலிமையை தர வல்லது என மக்கள் நம்புகிறார்கள். அந்த அளவுக்கு ஒரு சக்தி வாய்ந்த அமிர்தம் தாய்ப்பால்.

பிறந்த குழந்தையின் குறிப்பிட்ட பருவத்தில் இதனை சரியாக குழந்தைக்கு ஊட்ட வேண்டும். கொரோனா வைரஸ் பாதித்த தாய்மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரலாமா, கூடாதா என்பது உலகம் முழுக்க இருந்த பொதுவான சந்தேகமாகவே இருந்து வந்தது.

ஆனால், இந்த கொரோனா வைரஸும் கூட தாய்- சேய் பிரிவின் வலையை உணர்ந்திருக்குமோ என்னவோ... தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தாலும், அவர்கள் தாய்ப்பால் தந்தால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தாது என ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன. இந்த ஆய்வின் அடிப்படையில், கொரோனா பாதித்த தாய்மார்கள் தயக்கமின்றி தாய்ப்பால் கொடுக்கலாம் என ஆறுதலான செய்தி ஒன்றையும் உலக சுகாதார நிறுவனம் அண்மையில் தெரிவித்தது.

கொரோனா வைரஸ் தாய்ப்பாலில் கலக்குமா என்று பல்வேறு ஆய்வுகள் நடத்தபட்டதில், தாய்ப்பால் மூலம் இந்த வைரஸ் பரவாது' என்றே தெரிவிக்கிறது. அதனால், Covid19 தொற்றால் பாதித்த தாய், தான் குழந்தைக்கு தாய்ப்பால் தாராளமாக தரலாம். முதலில் அந்தக் குழப்பம் தாய்மார்களுக்கு வேண்டியதில்லை. அதேநேரத்தில் அதை எப்படி கொடுக்க வேண்டும் என்பதில்தான் கவனம் தேவை.

ஏனெனில், தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு பரவாத கொரோனா வைரஸ் தொற்று, தாய்ப்பால் கொடுக்கும்போது, மிகவும் நெருக்கமாக இருப்பதால், மூச்சுவிடுதல் மூலம் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே, கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். பால் கொடுக்கும்முன் கிருமிநாசினி அல்லது சோப்பு மூலம் நன்றாக கழுவி விட்டு, மார்பை சோப்பு போட்டு கழுவி தண்ணீரால் துடைத்து விட்டு, முடிந்தால் கையுறை மாட்டி, தாய்ப்பால் தரலாம்.

கர்ப்பத்தின்போது தாயிலிருந்து , குழந்தைக்கு கடத்தப்பட்ட நோய் எதிர்ப்பு (Antibodies) குழந்தையின் ரத்தத்தில் இருப்பதால், ஆறு மாதத்திற்கு குறைவான குழந்தைகளுக்கு, இவை தொற்றிலிருந்து பாதுகாப்பு தரலாம். பால் கொடுத்து முடித்து விட்டு, தனிமை படுத்துதலை தொடரலாம். உணர்வு பூர்வமாக இது கஷ்டம் என்றாலும், இந்த இக்கட்டான சூழலில், "என் பாலை என் குழந்தைக்கு தந்தேன்" என்ற மனநிறைவாது தாய்க்கு கிடைக்கும்.

ஒருவேளை தொற்று பாதிப்பு கடுமையாக இருந்து, நேரடியா தாய்ப்பால் கொடுக்க முடியாத சூழலில், வசதிபடும் சமயம், தாய்ப்பாலை சுத்தமான முறையில் பீச்சி எடுத்து, தேவைப்படும்போது குழந்தைக்கு தரலாம். முறையாக பீச்சி எடுத்த தாய்ப்பாலை, வெளியில் (Roomtemperature) சுத்தமான முறையில் 4 மணி நேரம் வரையிலும், ரெப்ரிஜிரேட்டர் வைத்து 4 நாட்கள் வரையிலும் வைத்து, தேவைப்படும் சமயம் குழந்தைக்கு தரலாம்..

தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு பொருட்கள், குழந்தைக்கு நோய்த்தொற்று வருவதை தடுக்கும் கவசமாக இருக்கும்.

அதுமட்டுமல்ல குழந்தைக்கு , தொற்று இருந்தால், அப்போதும் இந்த முறையில் தாய்ப்பால், கொடுக்கலாம். தொற்றின் , தனிமை படுத்துதல் காலம் சராசரியாக 14 நாட்கள் என்பதால், தாய்ப்பால் தொடருவதில், தொற்றால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு, பெரிய பிரச்சினை இருக்காது.

இதில் ஏதாவது சிரமம் இருந்தால், அரசின் அனைத்து மகப்பேறு மருத்துவமனையில் உள்ள அரசு தாய்ப்பால் வங்கிகளிடமிருந்தும் தாய்ப்பால் பெற்று வழங்கலாம்.

கொரோனா காலத்திலும் பச்சிளங் குழந்தைக்கு ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். தாய்ப்பால் மூலம் கொரோனா பரவாது என்பதோடு, அக்கிருமியை எதிர்க்கும் சக்கி தாய்ப்பால் மூலம் குழந்தைக்குக் கிடைக்கும். கரோனா பாதிப்பு தாய்க்கு இருந்தாலும் தாயையும், சேயையும் பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை. முடிந்தால் ஒரு மருத்துவரின் ஆலோசனை பெற்றும் இதை பின்பற்றலாம்" என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.

Trending News

Latest News

You May Like