உடைந்த எலும்பையும் ஒட்ட வைக்கும் பிரண்டை

குழந்தைகள் கீழே விழும்போது கை கால் எலும்பு முறிவு அதிகரித்து வருகிறது இதற்கு காரணம் கால்சியம் குறைபாடு தான் முக்கிய காரணமாக இருக்கும்.

உடைந்த எலும்பையும் ஒட்ட வைக்கும் பிரண்டை
X

கால்சியம் குறைந்தால் எலும்புகள் பலவீனமாகும் என்கிறார்கள் மருத்துவர்கள். கால்சியம் குறைபாட்டுக்கு மாத்திரைகளையும் பரிந்துரைக்கி றார்கள். ஆனால் மாத்திரைகளுக்கும் மேலாக அதிகப்படியான கால்சியத்தை அளிக்கும் அற்புத மூலிகையாக பிரண்டை இருக்கிறது என்பது பெரும்பாலானோருக்கும் தெரியவில்லை.

எங்கும் இயல்பாக பற்றிக்கொண்டு படர்வது பிரண்டை. பார்க்க தண்டு போன்று நான்கு கோணத்தில் அழகிய மடலான இலைகளுடன் பற்றுக் கம்பிகளையும் உள்ளடக்கியது பிரண்டைச் செடி. மருத்துவப்பலன்கள் நிறைந்த இந்த பிரண்டை வஜ்ஜிரவல்லி என்றும் அழைக்கப்படுகிறது.
பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை உருட்டு பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை, ஓலைப்பிரண்டை,சதுர பிரண்டை என்று பல வகைகள் உண்டு.

உடலில் இருக்கும் வாயுக்கள் எலும்புகள் சந்திக்கும் இடங்களில் நரம்பு முடிச்சுகளில் வாயு நீர் தேங்கிவிடும். இந்த நீரால் முதுகு வலி, கழுத்து வலி உண்டாவதோடு, முதுகுத்தண்டு பாய்ந்து சளியாக மாறும். இதைக் கரைத்து வெளியேற்ற பிரண்டை உதவுகிறது.

செரிமானப் பிரச்னைகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானத்தைத் தூண்டும் சுவையான மருந்து பிரண்டை. குழந்தைகளில் எலும்பில் வலுவை அதிகரிக்கும். தற்போது குழந்தைகள் கீழே விழும்போது கை கால் எலும்பு முறிவு அதிகரித்து வருகிறது இதற்கு கால்சியம் குறைபாடு தான் முக்கிய காரணமாக இருக்கும். பிரண்டை இத்தகைய குறைபாட்டை ஈடு செய்து விடும்,

மூலப்பிரச்னை, ஆசனவாயில் அரிப்பு, மலத்தோடு இரத்தம் வருதல் போன்ற பிரச்னைகளை உள்ளடக்கியவர்கள் வாரம் ஒரு முறை பிரண்டை யைச் சாப்பிடலாம். குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி உபாதையிலிர்ருந்து தப்பிக்கவும் பிரண்டை பயன்படுகிறது.
காலில் சுளுக்கு, வீக்கம், மூட்டு வலி இருப்பவர்கள் பிரண்டையுடன் உப்பு சேர்த்து அரைத்து மிதமான பொறுக்கும் சூடு வரை வதக்கி பற்று போட் டால் வலி குறைய தொடங்கும்.

பிரண்டை நமது இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருப்பதோடு இரத்தக் குழாய்களில் அடைந்திருக்கும் கெட்ட கொழுப்புகளைக் கரைத்து வெளி யேற்றும். எல்லாம் சரி பிரண்டையை சாப்பிட தயார். ஆனால் எப்படி சாப்பிடுவது என்கிறீர்களா? எளிமையாக செய்யலாம்.

உடைந்த எலும்பையும் ஒட்ட வைக்கும் பிரண்டை

தேவையான பொருள்கள்:

நார் எடுத்து நன்றாக சுத்தம் செய்த இளம் பிரண்டை -1 கப், (பிரண்டையை சுத்தம் செய்யும் போது அதன் சாறு மேலே பட்டால் அரிப்பு உண்டாகும்) தேங்காய் துண்டுகள் – கால் கப், கறுப்பு எள்- அரை சிறிய தேக்கரண்டி, உ.பருப்பு - அரை தேக்கரண்டி, வரமிளகாய் -காரத்துக் கேற்ப, புளி-சிறு எலு மிச்சையளவு, பூண்டு-1 கைப்பிடி, பெருங்காயம் -அரை டீஸ்பூன், உப்பு, நல்லெண்ணெய்-தேவைக்கேற்ப.
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு உ.பருப்பு, எள், வர மிளகாய், பூண்டு, புளி, தேங்காய், பெருங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.பிறகு வாணலியில் 1 டீஸ்பூன் நல்லெ ண்ணெய்விட்டு நறுக்கிய பிரண்டைத்துண்டுகளைப் போட்டு மிதமானத்தீயில் அதன் நிறம் மாறும் வரை நன்றாக வதக்கவும்.

ஏற்கனவே வதக்கிய பொருள்களைச் சேர்த்து ஆறவைத்து மிக்ஸியில் மைய அரைக்கவும். இப்போது ருசியான பிரண்டை -எள் துவையல் தயார். சூடாக வடித்த சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு இந்தத் துவையல் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை போன்றவற்றுக்கும் ஏற்றது.

சுவையோடு ஆரோக்யமும் இணைந்திருப்பதால் இனி பிரண்டை துவையல் உங்கள் வீட்டிலும் மணக்கட்டும்.

www.newstm.in

newstm.in

Next Story
Share it