தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுகள் !

குழந்தை பிறந்த பிறகு பூண்டை உணவில் அதிகளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் குழந்தைக்கு தேவையான பால் சுரப்பதுடன், தாயின் உடம்பில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதையும் இது தடுக்கும் .

தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுகள் !
X

குழந்தை பிறந்தவுடன் வீட்டில் இருக்கும் மூத்த தாய்மார்கள் பிள்ளை பெற்ற பெண்ணுக்கு பத்திய உணவு தயார் செய்து கொடுப்பார்கள். அந்த உணவுகளை சாப்பிடும் தாய்மார்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன் குழந்தைக்கு போதுமான பாலும் சுரக்கும்.

ஆனால் நகரமயமான இந்த கால கட்டத்தில் மூத்த குடிமக்களின் அறிவுரை செல்லாக்காசாகவே மதிக்கப்படுகிறது என்பது மிகவும் வருந்தத்தக்க உண்மை. இதன் விளைவாக குழந்தை பெற்ற பெண் மட்டுமல்லாமல், குழந்தையும் சேர்ந்து பல துன்பங்களை சந்திக்க நேரிடுகிறது. அதில் ஒன்றுதான் குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் சுரக்காமல் போவது. இதனை சரி செய்ய நமது முன்னோர்கள் பயன்படுத்திய உணவுகள் பற்றி பார்க்கலாம்.

பப்பாளிக்காய் :

தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுகள் !

பப்பாளிக்காயை சிறு சிறுதுண்டுகளாக நறுக்கி வேகவைத்து சாப்பிடுவதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதுடன். பாலின் மூலம் குழந்தைக்கு வைட்டமின் ஏ அதிகளவில் கிடைக்கும்.

வெந்தயம்:

தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுகள் !

குழந்தை பிறந்தது முதல் வெந்தய விதையை ஊறவைத்து அந்த நீரை அருந்துவதால் பால் சுரப்பு அதிகரிப்பதுடன். தாய் - சேய்க்கு ஏற்படும் அதிகப்படியான உடல்சூடும் குறையும். அதோடு பிரசவத்திற்கு பிறகு கருப்பை வேகமாக சுருங்க வைக்கும் வெந்தய நீர்.

பூண்டு:

தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுகள் !

குழந்தை பிறந்த பிறகு பூண்டை உணவில் அதிகளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் குழந்தைக்கு தேவையான பால் சுரப்பதுடன், தாயின் உடம்பில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதையும் இது தடுக்கும் .

பேரிச்சம்பழம்:

தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுகள் !

குழந்தை பிறப்பதற்கு முன்பும் பிறந்த பிறகும் தாய்மார்கள் பேரீச்சம்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் குழந்தைக்கும், தாய்க்கும் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். அதோடு குழந்தை பிறந்த பிறகு போதுமான தாய்ப்பால் சுரக்கவும் இது வழிவகை செய்யும்.

கீரை:

தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுகள் !
இரும்புச்சத்து நிறைந்த முருங்கக்கீரை, பாலக்கீரை போன்ற கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் சுரக்கும்.

நட்ஸ் :

தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுகள் !
குழந்தை பிறந்த பிறகு பாதாம், பிஸ்தா , வேர்க்கடலை போன்ற நட்ஸ் வகைகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதுடன் குழந்தையின் வளர்ச்சியும் மேம்படும்.

மீன்:

தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுகள் !

மீன் வகைகளில் பால் சுறா போன்ற மீன் வகைகளை பூண்டு சேர்த்து சமைத்து உட்க்கொண்டால் பால் சுரப்பு அதிகரிக்குமாம்.

கால்சியம் நிறைந்த உணவுகள் :

தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுகள் !

கால்சியம் அதிகமுள்ள பால், முட்டை போன்றவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் போதுமான அளவு சுரக்கும் .

newstm.innewstm.in

Next Story
Share it