1. Home
  2. ஆரோக்கியம்

மாதர்களின் உயிரை பறிக்கும் மார்பகப் புற்றுநோய்!

மாதர்களின் உயிரை பறிக்கும் மார்பகப் புற்றுநோய்!

பாலூட்டும் தாய்மார்கள் முதல், மெனோபாஸ் நிலையை அடைந்தவர்கள் வரை, பெரும்பாலானோருக்கு, தங்கள் மார்பகங்களை சரியாக பராமரிக்க வேண்டும் என்ற அக்கறை இருப்பதில்லை. விளைவு, மார்பக புற்றுநோய். பெண்களின் மார்பகங்களில் சிறு கட்டியாக தோன்றும் இந்த ஆட்கொல்லி நோய் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், உரிய சிகிச்சை பெறுவதின் மூலம் உயிரிழப்பை தவிர்க்கலாம்.

வயது வித்தியாசமின்றி பெண்களை தாக்கும் இந்த மார்பக புற்று நோயால், உலகெங்கும், 5.20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, 2004ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மட்டுமே. புற்றுநோயால் உயிரிழப்பவர்களில், 7 சதவீதம் பேர், மார்பக புற்றுநோய்க்கு உள்ளானவர்களாக இருப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன

மார்பக புற்று நோய்க்கான காரணங்கள் குறித்து பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, புற்று நோய்க்கான சில காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

11 வயதிற்கு முன் புதுப்பெய்தும் பெண் பிள்ளைகள், மார்பக புற்று நோயால் பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கால தாமதமாக திருமணம் செய்து 30 அல்லது 35 வயதுக்குப் பிறகு, முதல் குழந்தையைப் பெறும் பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம்.

குடும்ப வாழ்கை அனாவசியம் என கருதி வாழ்நாள் முழுவதும், கர்ப்பம் அடையாத பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வரக்கூடும்.

55 வயதை தாண்டி `மெனோபாஸை' சந்திக்கும் பெண்களில் சிலருக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இரவு நேரங்களில் சரியாக உறங்காமல் கண் விழித்திருக்கும் பெண்களுக்கு, `மெலோடினின்' ஹார்மோன் சுரப்பு குறைந்து விடும். இதனாலும் மார்பக புற்று நோயை வரும் வாய்ப்புகள் உள்ளன.



மாசு அதிகம் உள்ள காற்றை தொடர்ந்து சுவாசிக்கும் பெண்களுக்கும், மாசு நிறைந்த இடத்தில் வசிக்கும் பெண்களுக்கும் மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாம்.

இதை ஆரம்பதியே எப்படி கண்டறிவது என்பதை அடுத்த தொடரில் காணலாம்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like