உடலைப் பலப்படுத்தும் யோகா !! எப்படி ?
உடலைப் பலப்படுத்தும் யோகா !! எப்படி ?

யோகா பயிற்சியின் மூலம் ஒருவரின் உடலில் இருக்கும் தேவையற்ற அமிலங்கள் வெளியேறுகின்றன. ரத்த ஓட்டம் சீரடைகிறது. ஆக்ஸிஜனை அதிகம் உள்ளிழுக்கும் திறனை நுரையீரல் பெறுகிறது.
உடல் ஆரோக்கியத்துக்கு ஐந்து ஆசனங்களை தினமும் செய்தாலே போதும் என்கின்றனர் யோகாசன நிபுணர்கள். பத்மாசனம் மன ஒருமைப்பாட்டை வளர்க்கும். நினைவாற்றலைத் தூண்டும்.
நாடி சுத்தி செய்வதன்மூலம் ரத்தத்தில் சிவப்பணுக்களின் திறன் கூடும். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதயக் கோளாறுகள் போன்றவற்றை வராமல் தடுப்பதற்கு யோகா பயிற்சிகள் பெரிதும் காரணமாக இருக்கின்றன.
யோகாவை இன்றைக்கு அன்றாட வாழ்வுக்கான உடற் பயிற்சியாகவும், சில வகையான நோய்கள் மற்றும் உபாதைகளிலிருந்து விடுபடுவதற்கான வழியாகவும் பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர்.
இதன் காரணமாக பி.எஸ்சி., எம்.எஸ்சி., முதுகலை டிப்ளமோ, எம்.ஃபில் மற்றும் பி.எச்டி., ஆகிய பட்டங்கள் வரை யோகாவில் பெறுவதற்கு வழியிருக்கிறது. பயிற்சியாளர் ஆவதற்கு, யோகாவில் முதுநிலை டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. யோகா படித்தவர்கள் சொந்தமாக யோகா நிலையங்கள் அமைத்தும் மக்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.
Newstm.in