கருப்பையை வலுப்பெறச் செய்யும் கறுப்பு உளுந்து.. !

கருப்பையை வலுப்பெறச் செய்யும் கறுப்பு உளுந்து.. !

கருப்பையை வலுப்பெறச் செய்யும் கறுப்பு உளுந்து.. !
X

இந்தியாவின் முக்கிய உணவு, நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் நல்ல உணவு ஆவியில் வேக வைக்கும் இட்லிதான். இது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் இட்லி பரிந்துரைக்க காரணம் அதில் சேர்க்கப்படும் உளுந்தம் பயிறாலும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டுமே.

இயற்கை அழகைக் கொண்டிருக்கும் நாமே பாலீஷ் போட்டுக்கொள்வது போல நாம் சாப்பிடும் உணவு பொருள்களையும் பளபளவென பாலிஷ் போட்டு வரு வதையே விரும்புகிறோம். பளபளக்கு வெள்ளை சர்க்கரை போலவே பளபளக் கும் பருப்பு வகைகள் தான் உணவை வெள்ளையாக்கி மிருதுவாக்கி சத்துக்களை தருகின்றன என்ற எண்ணம் நம்மில் பெரும்பாலோருக்கு உண்டு. குறிப்பாக உளுத்தம் பருப்பு.

நீள் உருளை வடிவில் காணப்படும் தோல் அகற்றப்படாத உளுந்து கறுப்பு உளுந்து என்றழைக்கப்படுகிறது. இந்தத் தோலில் பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கிறது. இவைதான் மாவை பக்குவமாக புளிக்க செய்கின்றன. மேலும் இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. ஆனால் நாம் தோல் நீக்கிய உளுந்தை பயன்படுத்தி இதில் உள்ள சத்துக்களை இழந்துவிடுகிறோம்.

இன்றும் கிராமங்களில் கறுப்பு உளுந்து பயன்படுத்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. பெண்கள் எலும்பு வலுபெற கருப்பை வலுபெற இவைதான் பிரதான உணவாக நம் முன்னோர்களால் கொடுக்கப்பட்டது. பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் என அனைவருக்கும் சத்து அளிக்கும் பலகாரம் உளுந்தங்களி எப்படி செய்வது பார்க்கலாமா?

தேவையான பொருள்கள்:
பச்சரிசி - 1 கப்,
கறுப்பு உளுந்து- 1 கப்,
கருப்பட்டி -ஒன்றரை கப்,
நல்லெண்ணெய் - 1 கப்,
ஏலத்தூள் - 1 டீஸ்பூன்.

செய்முறை:

பச்சரியை சுத்தம் செய்து மாவாக்கி வைக்கவும். கறுப்பு உளுந்தையும் சுத்தம் செய்து மாவாக்கி வைக்கவும். அகன்ற பாத்திரத்தில் இரண்டு மாவையும் கொட்டி நன்றாக கலக்கவும். கறுப்பு உளுந்தை இலேசாக வாசம் போக வறுத்து சேர்த் தால் பச்சை வாசனை போகும்.அகன்ற பாத்திரத்தில் கருப்பட்டியை போட்டு கால் தம்ளர் தண்ணீர் விட்டு பாகு பதம் வந்ததும் மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலக்கி நல்லெண்ணெய் சேர்த்துக்கொண்டே வரவேண்டும். மாவு வேகும் வரை நல்லெண்ணெயைச் சிறிது சிறிதாக சேர்த்து வர வேண்டும். களி பதத்துக்கு வந்ததும் இறக்கி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து குழந்தைகளுக்கு தரலாம். அப்படியே கிண்ணத்தில் போட்டும் சாப்பிடலாம். சுவையிலும் குறை யிலும் சத்திலும் குறையில்லா களி இது.

இயன்றவரை இட்லி, தோசை மாவு அரைக்கும் போது கறுப்பு உளுந்தை ஊற வைத்து அரைத்து பயன்படுத்துங்கள். தேவையெனில் தோலை மேலாக நீக்கி கொள்ளலாம். சத்தில்லாத வெள்ளை இட்லியை விட சத்துக்கள் நிறைந்த சற்று நிறம் குறைந்த இட்லி சுவையிலும் மிருதுத்தன்மையிலும் முதன்மையா னதாக இருக்கும். செய்துபாருங்கள் நீங்களே உணர்வீர்கள்.

newstm.in

Next Story
Share it